பக்கம்:லேசர் அறிவியல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 நேரத்திலும் உலகில் நடைபெறுகின்ற அனைத்து வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், தொலைபேசி உரையாடல்களையும் ஓர் இலேசர் கற்றை ஒரே சமயத்தில் அனுப்ப இயலும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். வானொலி அலைகளின் அதிர்வெண் ஒருவினாடிக்கு ஒரு மில்லியன் சைக்கிள்கள். தொலைக்காட்சி அலைகள் அதிர் வெண் 100 மில்லியன் சைக்கிள்கள். பார்க்கக்கூடிய ஒளி அலைகளின் அதிர் வெண் 7.50 மில்லியன் சைக்கிள்கள். ஒரு விநாடிக்கு அலைகள் அதிகமாக அதிகமாகச் செலுத்தும் செய்தியும் அதிகமாகும். செய்திகளை எடுத்துச் செல்ல, வானொலி அலைகளைப் போல, ஒளி அலைகளும் அதிர்வெண்ணில் மாற்றப்பட வேண்டும். மின்னணுச் செவி இதுவும் அமெரிக்கப்புனைவே. புறவான வெளியில் மில்லியன் மைல்கள் தொலைவிலுள்ள ஏவுகணைகள், விண்மீன்கள் ஆகியவற்றிலிருந்து குறிபாடுகளைப் பெற, இது பயன்படுகிறது. இது ஒரு சிவப்புக் கல் இலேசர் வான வெளிக்கலங்ளை அறியவும், வான வெளிச் செய்தித் தொடர்புக்கும் இது பயன்படுகிறது. இதன் எடை 25 பவுண்டு, குறுகிய இடத்தை அடைத்துக் கொள்வது. பெட்டியில் வைத்து எடுத்துச் செல்லலாம். இலேசர் நுண்ணோக்கி இது அதிகம் பயன்படுகிறது. பெரிய திரையில் பொருள்களை இதைக் கொண்டு நன்கு ஆராய முடிகிறது. சோவியத்து அறிவியல் கழகத்தின் இயற்பியல் நிறுவனம் இதனை உருவாக்கியுள்ளது. இதைக்கொண்டு ஒளியை அதிகமாக்காமல், படத்தின் ஒளிர்வைப் பல மடங்கு அதிகமாக்கலாம். இலேசர் நிறப்படி எடுப்பான் பத்தாண்டு ஆராய்ச்சிக்குப் பின், இதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/38&oldid=886997" இலிருந்து மீள்விக்கப்பட்டது