பக்கம்:லேசர் அறிவியல்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அலெக்ஸ்டிரவூஸ், ஜார்ஜ் மெர்கன்ஸ் என்பார் உதவியுடன் அமைத்துள்ளார். இதில் இலேசரும் மின்னணுவும் இணைந்துள்ளன. 35 மி.மீ. கண்ணாடி வில்லைகளிலிருந்து உயரிய நிறப்படிகளை எடுக்க இது உதவுகிறது. சாயத்தால் எடுக்கும் 8 X 10 அளவுள்ள படியின் விலை 220 டாலர்கள். அதே அளவுள்ள இலேசர் நிறப்படியின் விலை 13.50 டாலர்கள். இதில் சிவப்பு, நீலம், பச்சை ஆகிய மூவகை இலேசர் கற்றைகள் பயன்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகப் படிமூலம் இலேசராலானது. அதிக ஆற்றலுள்ள சிறிய இலேசர் இது கார்பன்-டை-ஆக்சைடு இலேசரே. இது எல்லை காணப்பயன்படுவது. இதன் வெளியேறு ஆற்றல் 10.6 மைக்ரான்களில் 300 கேடபிள்யூ துடிப்பு அகலம் 60 நேனோ செகண்டுகள். உச்ச வெளியேறு கற்றையின் விரிவு 3.5 மில்லி ரேடியன்கள். இதனை 2 எச்இ சுற்று வரை இயக்கலாம். மீள் நிரப்பிகளுக்கிடையே இதன் நீடித்த உழைப்பு ஒரு மில்லியன் சுடுவுகள். இதற்கு இயல்பாக முழு மின்னணு ஆற்றல் அளிப்பு உண்டு. ஆற்றல் அளிக்கும் கருவிகளுடன் இதன் அளவுகளாவன. 240 x 150 x 150 x 150 மி.மீ. தோராய எடை 3.5 கி.கி. இலேசர் ரேடார்கள் இலேசர் எல்லைக்காணியில் உள்ள நெறிமுறை இவற்றில் உள்ளது. இவற்றை அமைப்பதில் அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒளிக்கற்றையில் குறுக்கீடு இருந்தால் ஒழிய, இவற்றின் இயக்கத்தில் தடை ஏற்படுவதற்கில்லை. ஒளிக்கற்றை குறுகலாக இருப்பதால், தடை ஏற்படுவது என்பது அரிதே அளவு, எடை ஆகியவற்றில் தொகுதியாகப் பார்க்கும்பொழுது இவை சிறியவையே. புகை, மழை, பனி, மூடுபனி முதலியவற்றால் இவற்றின் ஒளிக்கற்றைச் செறிவு குறையவல்லது. ஆகவே, இக்கற்றையினைக் குழாய் வழியாக அனுப்புவது நல்லது. குழாயின் உட்பரப்பில் ஒளிக்கற்றை மோதும்பொழுது குறைந்த அளவு ஒளி இழப்பை உண்டாக்க அலை வழிகாட்டிகள் பயன்படுகின்றன. தவிர, வழிகாட்டிகள் ஒளிக் கதிர்ச்சிதறலைக் குறைத்து, அதனைக் குழாய்ச் சுவர்களுக்கு அப்பால் வைக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/39&oldid=886999" இலிருந்து மீள்விக்கப்பட்டது