பக்கம்:லேசர் அறிவியல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இவ்வகை இலேசர்கள் பல வடிவங்களில் அமைந்துள்ளன. பொதுவான ஒரு வடிவம் குழாய் வடிவம். இதில் மறிப்பான் முட்டை வடிவ உருளையாக இருக்கும். இலேசர் தண்டும் விளக்கும் அடுத்தடுத்து அதன் மையத்தில் நீளவாட்டில் அமைந்திருக்கும். மற்றொரு வகையில் பல விளக்குகள் மறிப்புத் தொகுதியில் நான்கிலை கிளாவர் வடிவத்தில் பொருந்தி இருக்கும். இப்புதிய அமைப்பில் இலேசர் தண்டும் விளக்கும் உட்குழிவான கோண மறிப்பான்களில் மையம் நெடுக உள்ளன. இதனால் இதன் முழு உட்புரப்பும் மறிக்கும். இப்புதிய வடிவம் இலேசர் தொகுதியின் இயங்குதிறனைப் பெருக்கவல்லது. இதில் இலேசர் தண்டுடன் பாய்ஒளி திறமுடன் இணைக்கப்படுகிறது. கோளவடிவ ஏற்றுகுழாய் தொடர்ச்சியாக ஒளிசெல்லும் ஒய்ஏஜி இலேசர் தண்டினால் ஆராயப்பட்டது. ஒய்ஏஜி என்பது இலேசர் பொருள்களில் ஒன்று. குறைந்த ஆற்றல் வாயில் அது. அதன் ஆற்றல் அதனை ஒளி உமிழுமாறு தூண்டும். இப்புதிய குழாய் உயர்வரை கொள்கை நிலை நிலக்கணக்கு வடிவ இணைப்புத்திறனை அளிக்கவல்லது. இப்புதிய கோளவடிவக்குழாயினை அமைத்தவர்களில் ஒருவரான டாக்டர் சார்லஸ் சர்ச் அவர்கள் கருத்துப்படிதிட்டமான உருளைவடிவ மறிப்பான் பாய்ஒளியை இருபருமன்களில் மட்டும் குவிக்கவல்லது. அதாவது, உருளையின் குறுக்கு வெட்டுப்பகுதித் தளத்தில் குவிக்கும். அல்லது மேலும் கீழும் மட்டுமே மறிக்கும். மாறாகக் கோளவடிவ மறிப்பான் பாய் ஒளியை முப்பருமன்களிலிருந்து குவிக்கிறது. எல்லாத்திசைகளிலிருந்து வரும் ஒளி வெள்ளத்தில் இது இலேசர் தண்டினை ஆழ்த்துகிறது. ஒரு புறம் உருளைப்பாய்வுத் தொகுதியில் ஒளி மூலத்திற்கும் இலேசர் தண்டிற்கும் இடையே கருத்துடன் அமைக்கப்பட்ட இணைப்பு குறிப்பிடத்தகுந்த அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், விளக்குகளைச் சுற்றியுள்ள உறைகளுக்காகவும் குளிர் குழாய்களுக்காகவும் இதனைச் செய்ய வேண்டியுள்ளது. தவிர, இவை கதிர்வீசு வழியினைத் தடுத்து, உருளை மறிப்பானின் இயங்கு திறனைக் குறைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/41&oldid=887004" இலிருந்து மீள்விக்கப்பட்டது