பக்கம்:லேசர் அறிவியல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 மற்றொரு புறம் கோள மறிப்பானின் பரப்பு, பாய்ஒளி, இலேசர் தண்டு ஆகியவற்றைச் சுற்றி நெருக்கமாக அமையவில்லை. இலேசர் தண்டும் விளக்கும் வசதியாக இருக்கும் ஏற்பாட்டுடன் பெரிய மறிப்பான் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஒளிபாய்வதில் குறுக்கீடு இல்லை. தவிர, முட்டைவடிவ உருளைகள் அல்லது அவ்வடிவத்திற்கு இணையான கோளமில்லாத அமைப்புகளைக் காட்டிலும், ஒளிஇயல் இணக்கங்களுக்கு உட்பட்டுக்குறைந்த விலையில் எளிதாகக் கோள மறிப்பானை உற்பத்தி செய்யலாம். மேற்கூறிய ஆராய்ச்சிக் கூடங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் 25 செ.மீ. குறுக்களவுள்ள கோள ஆடி, 5 x 30 மி.மீ. அளவுள்ள சிறிய ஒய்ஏஜி தண்டில் ஒளி செலுத்தப்பயன்பட்டது. இலேசர் தண்டையும் விளக்குத்தாங்குதல்களையும் நிலைநிறுத்த எதிரெதிராக உள்ள இரு வட்டத்துண்டுகள் இருந்தன. தாங்குதல்களில் 1000 வாட் டங்ஸ்டன் அயோடின் படிகக் கல் விளக்கு இருந்தது. ஒய்ஏஜி தண்டு நீரினால் குளிர்விக்கப் பட்டது. விளக்குக்கு அளிக்கப்பட்ட 1060 வாட் உள்வரு ஆற்றல், இலேசர் தண்டின் புறத்தேயுள்ள ஒருங்கியைவிகளுடன் 2.2% சரிவுத் திறனுடன், 10.6 வாட் வெளியேறு இலேசர் ஆற்றலை அளித்தது. லிடார் இது புதிய வானிலை அல்லது ஒளி இயல் இலேசர் ஆகும். கொள்கையில் இலேசர் நெறிமுறையினையும் பயனில் ரேடாரையம் ஒத்தமைவதால் இதற்கு இப்பெயர் வரலாயிற்று. இது ஒளிக்கற்றைகளைப் பல பொருள்களுக்கு அனுப்புகிறது. பின் அவற்றிலிருந்து வரும் எதிரொலிகளைக் கண்டறிகிறது. இது காற்றுவெளி ஆராய்ச்சிக்குப் பயன்படுகிறது. குறிப்பாக அடுக்கு வெளியினை 8-20 கி.மீ உயரம் வரை ஆராய இது பெரிதும் பயன்படுகிறது. எந்த இடத்திற்கும் கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு இஃது ஊர்தியில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவைச் சார்ந்த ரிச்சர்டு அணி என்பார் மைரான் லிக்டா, ரொனால்டு டி. காலின்ஸ், பால்பெரிச், லாய்டு ஆல்டர்டன், இராபர்ட் பியர்ஸ் ஆகியோர் உதவியுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/42&oldid=887005" இலிருந்து மீள்விக்கப்பட்டது