பக்கம்:லேசர் அறிவியல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அமைத்துள்ளார். அறிவியல், பொறி இயல்துறை சார்ந்த புதிய கருத்து அடிப்படையில் அமைந்த கருவி இது. அகச்சிவப்பு லிடார், துடிப்பு லிடார் என இஃது இரு வகைப்படும். ஒர் ஒளிமின்கலம் அறியும் பகுதியுடன், இதனை ஒரு துப்பாக்கியின் மீது பொருத்தியுள்ளனர். இதனால் விண்ணிலுள்ள எந்தப்புள்ளியிலும் குறிவைக்கலாம். இதனைக் கொண்டு காற்று வெளியிலுள்ள பொருள்களைப் பகுத்தறியலாம். இது 1963-ல் அமைக்கப்பட்டது. இதற்குப் பின் ஆற்றல் வாய்ந்த பல லிடார்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமவெளி, மலை முதலிய எப்பகுதிகளுக்கும் இவை செல்லக்கூடியவை. முதன் முதலில் உருவாக்கிய லிடார் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன் செலுத்தி, பெறுவி ஆகியவற்றின் ஒளிக்கற்றை அகலம் அதிகமானது. அதாவது, மூன்று நிமிட மின் பிறைவளைவு ஆகும். 10-20 மெகாவாட் உச்ச ஆற்றலும் தோராயமாக ஒருவிநாடியில் 30 பில்லியன் நேரமுள்ள துடிப்புகளை இது செலுத்துகிறது. பெரிய லிடார்களில் ஒன்று இரு சிவப்புக்கல் இலேசர்களைக் கொண்டது. 30 விநாடி மின் பிறை வளைவு ஒளிக்கற்றை அகலமும் 25 நேனோ செகண்டுகள் காலமும் கொண்ட 40 மெகாவாட் துடிப்புகள் இரண்டினை மாறிமாறிச் செலுத்தக்கூடியது. ஒரு மில்லி விநாடியின் பின்ன நேரத்தில் இயங்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இந்த லிடாரில் ஒவ்வொரு ஒளிக்கற்றையின் முனைப்படுதிசை முனைச்செயல் ஆய்வுகளுக்குத் தனியே கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் சிறப்புகள் பின்வருமாறு: 1. காற்று மேல் வெளியில் மறிப்புகளை 30 கல் உயரத் திற்கு இதைக்கொண்டு பெறலாம். நடைமுறையில் உள்ள கருவிகளைக் கொண்டு இவ்வுயரத்தில் இதனைப்பெற இயலாது. 2. அணுகிவரும் மூடுபனியின் விரைவினையும் இதனைக்கொண்டு அளக்க இயலும் முனைச் செயலினையும் வடிக்கட்டிகளையும் பயன்படுத்தி, ஒரு மேகத்தில் பனிக்கட்டித் துகள் உள்ளதா அப்படி இருந்தால் அது வளர்கிறதா சிதறுகிறதா என்றும் உறுதி செய்யலாம். Sヘ/ーム+.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/43&oldid=887006" இலிருந்து மீள்விக்கப்பட்டது