பக்கம்:லேசர் அறிவியல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 5. சிறிய அளவு காற்று வெளி இயக்கங்கள், காற்று மாசு, ஆவியாதல், மேகம் உண்டாதல் முதலியவை பற்றிய செய்திகளை இது அறியும். 6. லிடார் வளர்ச்சிக்கு இலேசர் தொழில் நுணுக்கம் தேவை. இக்கருவித் தொகுதிகளில் புதிய படிகங்கள் பயன் படுகின்றன. மிக உயரிய ஆற்றல்கள் உண்டாக நிறைவுநிலை வடிக்கட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை புதிய நுணுக்கங்கள் ஆகும். 7 லிடார் தொகுதிகளில் விரும்பத்தக்க முன்னேற்றங்களில் ஒன்று, அதன் இயக்குவீதத்தை அதிகமாக்குதலாகும். இதனை ரேடார் பொறி இயலார் துடிப்பு மீள்அதிர்வெண் என்பர். இவ்வசதி இல்லை என்றால் லிடார் இலக்குகளின் கிடைமட்ட பரவலையும் செங்குத்துப் பரவலையும் படமாக்க இயலாது. ஏனெனில், போதிய உற்று நோக்கல்கள் செய்வதற்குமுன், பெரிய மாற்றங்கள் ஏற்படும். இதற்கு அகச்சிவப்பு லிடார்கள் பெரிதும் பயன்படும். உஇலேசர் வடிவாக்கம் இது பிரிட்டனில் உருவான முறை,ரப்பர், மரம் முதலிய பொருள்களை வடிவாக்கம் செய்வது. இவ்வடிவாக்க எந்திரத்திற்குப் பெயர். டெசிடெக். உலகிலேயே மிகப் பெரியது.மிக விரைவாக வெட்டுவது. வெட்டுதல் கணிப்பொறியால் கட்டுப்படுத்தப் படுவது, ஒரு நிமிடத்திற்கு 40 மீட்டர் அளவிற்கு வெட்டும். இதில் கரி ஈராக்சைடு இலேசர் பயன்படுகிறது. இது அதிகப்பயனறுதிறன் கொண்டது. கழிவிடையைக் குறைப்பது. கூடுதலான முடிப்பு வேலை தேவை இல்லை. இயக்கும் செலவும் குறைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/45&oldid=887010" இலிருந்து மீள்விக்கப்பட்டது