பக்கம்:லேசர் அறிவியல்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நம் ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ளன. ஊடுபொருள் கறைப்பாட்டை நீக்க, அதிக அளவு வெற்றிடத்தை உண்டாக்கவேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட சீசாக்களிலிருந்து வளிக்கலவையினை வளிக் குழாய்களுக்கு மாற்றுவதும் பின் அதனை மூடுவதும் மிகத் தந்திரமான நுணுக்கமாகும். இதனைச் செய்யத் தனிக் கருவிகளைச் சிஐஎஸ்.எல்லும், இந்திய அறிவியல் நிறுவன இயற்பியல் துறையும் உண்டாக்கியுள்ளன. இலேசர் நிறமாலை இயல் ஆராய்ச்சி அறிவியலாருக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கிய நுணுக்கம் இலேசர் நிறமாலை இயல். இதில் கதிர்வீச்சின் சிதறல், வெளியேற்றம், கவரல் ஆகியவை பற்றிய ஆராய்ச்சி, அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவை குறித்துத் தனியாகவோ அவை பொருள்களில் இருந்த படியோ, விரிவான தகவல்களை தருகிறது. இவ்வகையில் இலேசர் அதிக ஆற்றல் வாய்ந்த புதிய ஒளித்துருவியினை அளித்துள்ளது. இது இலேசர் ஆராய்ச்சிப் பணியில் ஒரு புரட்சியினை உண்டாக்கியுள்ளது. இலேசர் நிறமாலை இயல், அண்மையில் அனு உட்கருக்களின் ஆரங்களை அளக்கவும், காற்று வெளியில் மாசுபடுத்தும் பொருள்களை அறியவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒத்திசையம் இலேசர்கள் இவை மிகப் பயனுள்ளவை. ஓர் ஒத்திசையும் சாய இலேசரின் பகுப்புப்பிரிவு மிகக் குறைவாக இருக்கும். இதனால் நிறமாலை இயலுக்கு அதிகப்பகுப்புப் பிரிவு கிடைக்கும். இது மிகத்துல்லிய அணுமாறிலிகளையும் மூலக்கூறு மாறிலிகளையும் அளிக்கும். இதைக்கொண்டுதுகள் கொள்கைகளை ஆராயலாம். அணுக்களிலும் மூலக்கூறுகளிலுமுள்ள மின்னணுக்களை நேர்த்தியாகப் பகுத்துப் பார்க்கலாம். மூலக்கூறு அதிர்வுகளால் அகச்சிவப்பு இலேசர் ஒளி கவரப்படக் கூடியது. இலேசர் அதிர்வெண்ணைத் தகுந்த வகையில் தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்ட ஒரிமங்களில் தெரியக்கூடிய அகச் சிவப்பு ஒளியணுக்களில் கவரல் நிகழுமாறு செய்யலாம். இதனை ஒரிமப் பிரிப்பு நுணுக்க அடிப்படையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/47&oldid=887013" இலிருந்து மீள்விக்கப்பட்டது