பக்கம்:லேசர் அறிவியல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 செய்தித் தொடர்பு இலேசர் கண்டறியப்பட்ட நாளிலிருந்து ஒர் இலேசர் கற்றை செல்லும் வழியில் பல செய்திகளை அனுப்ப, ஒளித் தொடர்பு, ஒரு வழியாகக் கருதப்பட்டது. இப்பொழுது வளர்ந்து வரும் தொலைச்செய்தித் தேவைகளை நிறைவேற்ற இந்நுணுக்கம் பெரிதும் பயன்படும். குறைந்த ஒளி இழப்பு கொண்ட ஒளி இழைகளை இணைப்பாக அல்லது ஒளி உமிழும் இருவாய்களைத் தலைவாய்களாகப் பயன்படுத்தி இந்நோக்கம் நிறைவேறும் நிலையில் உள்ளது. பல கிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலேசர் செய்தி இணைப்புகள் ஏற்படுத்துவதும், ஒரே சமயத்தில் ஒரு சில இழைகளில் ஆயிரக்கணக்கான உரையாடல்களை அனுப்புவதும் நடைபெற்றுள்ளன. இலேசர் கற்றைகள் நிலாக்களுக்கு இடையேயும் நில நிலையங்களுக்கு நடுவேயும் ஒளித்தொடர்பினை அளிக்கவல்லவை. இதற்கு மூடிய சுற்று இணைப்பு தேவை. இலேசர் பிணைப்பு இலேசர் அனைத்துத் துறைகளிலும் முழுஅளவுக்குப் பயன்பட வேண்டுமானால், அதன் கதிர்வீச்சுப் பண்புகள் சரியாக இருக்க வேண்டும். இலேசர் பிணைப்பு அணு உலைக்கு அதிக ஆற்றல் உள்ளதும் குறுகிய துடிப்புகள் உள்ளதுமான இலேசர்கள் தேவை. இவற்றின் வெளியேறு ஆற்றல் ஒரு நேனோ செகண்டிற்கு 100 கிலோ ஜோல்களுக்கு மேல் இருக்கவேண்டும். தவிர, அவற்றிற்கு உயர்ந்த கதிர்கற்றைப் பண்பும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் ஒளிக்கற்றை நேர்த்தியாக குவிக்கப்படும். மேலும், அவற்றிற்கு உயர்ந்த இயங்குதிறனும், மீள்வீதமும் இருக்கும். இத்தகைய இலேசர், வளி இலேசராகவே இருக்க வேண்டும். ஏனெனில், திண்ம, நீர்மப் பொருள்களில் நீளச் சார்பிலா விளைவுகள் இருக்கும். இவற்றில் சில இப்பொழுது வடிவ அமைப்பு நிலையில் உள்ளன. துடிப்பு நேரம் பைக்கோ செகண்டுகள் உள்ள அல்லது அவற்றிற்குக் குறைவாக உள்ள இலேசர்கள், மூலக்கூறுகளில் விரைவுச் செயல்களை ஆராயத்தேவைப்படும். வியூவி பகுதிகளிலும், எக்ஸ்-கதிர் பகுதிகளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/49&oldid=887018" இலிருந்து மீள்விக்கப்பட்டது