பக்கம்:லேசர் அறிவியல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 மிகக்குறுகிய அலை நீளத்தில் ஒரு கருவியை உருவாக்கும் ஆராய்ச்சி அமெரிக்கா முதலிய நாடுகளில் நடைபெற்ற வண்ணம் உள்ளது. நீளச் சார்பிலாச் செயல்களில் ஒளியணு ஆற்றல்களைத் தொகுத்து இலேசர் அதிர்வெண்களை அதிகமாக்கலாம். குறுகிய அலைநீளங்களை உண்டாக்க இது ஒரு வழியாகும். இக்கதிர்வீச்சு தூண்டிய கணிமங்களில் பின் பெருக்கப்படலாம். இத்தகைய இலேசர்களின் தன் வெளியேற்றம், குறுகிய அலைநீளங்களில் அதிகமிருப்பதால், அது மிகக்குறுகிய காலத்துடிப்புகளை உண்டக்கும். வேதி இயல், உயிரியல் முதலிய துறைகளில் எக்ஸ் கதிர் இலேசர் பயன்படும். தவிர அணு, மூலக்கூறு ஆகியவற்றின் அமைப்பினை முப்பருமக்கோல நுண் பெருக்கி இயலைப் பயன்படுத்தி உறுதி செய்யலாம். உயர் வெப்பநிலைக் கணிமங்களை அறியலாம். நுண் சுற்று உற்பத்தியிலும் துடிப்புக்கதிர் இயலிலும் எக்ஸ்-கதிர் இலேசர் பயன்படும். இலேசர் கற்றையினைக் கையாளுதல் இலேசர் கற்றையிலுள்ள ஒளி பெரும்பாலும் தன் பண்புகளில் ஒரே மாதிரி இருப்பதால், அதனைப் பல வழிகளில் கட்டுப்படுத்தலாம், கையாளலாம். அக்கற்றையினை விலகச் செய்து அலகிடலாம், மாற்றலாம், விரைவாக நிறுத்தலாம், இயக்கலாம். ஒளிமின்னணு நுணுக்கங்கள் கொண்டு இவ்வாறு செய்யலாம். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு மிகப் பெரியதுடிப்பினை உண்டாக்குதல் ஆகும். உயர்ந்த ஆற்றல் கிடைக்குமாறு இலேசரில் ஒளி பாய்ச்சுகின்றவரை, தூண்டிய வெளியேற்றத்தைக் தடுக்க ஒருங்கியைவு ஆடிகளில் ஒன்றை தடை செய்யவேண்டும். இப்பொழுதுதுரண்டிய வெளியேற்றச் செயலைத் தூண்ட, குறுகிய துடிப்புள்ள உயர்ந்த ஆற்றல் வெளிப்படும். இரண்டாவது எடுத்துக்காட்டு தொடர்ச்சியான மிகக் குறுகிய பைக்கோ செகண்டு துடிப்புகளை உண்டாக்குதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/50&oldid=887021" இலிருந்து மீள்விக்கப்பட்டது