பக்கம்:லேசர் அறிவியல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆகும். இலேசர் குழியில் ஓர் இரட்டித்த தடவை ஒளி செல்லும் நேர இடைவெளிகளுக்குப் பொருந்துமாறு, ஒருங்கியைவு ஆடிகளில் ஒன்றை ஒழுங்காக இயக்கி, இதனைச் செய்யலாம். நீளச்சார்பிலா ஒளி இயல் மற்றொரு முக்கிய நுணுக்கம் கதிர்வீச்சு நிறங்களை அல்லது அதிர் வெண்களை மாற்றுதல் ஆகும். காட்டாக, நியோடைமியம் இலேசரிலிருந்து ஒளி 106 யூஎம்மில் (மைக்ரோ மிட்டர்களில் வெளியேறுகிறது. இதனை அதிர்வெண்ணில் இரட்டிப்பாக்கி 532 என்எம் அலை நீளம் அளிக்குமாறும் மூன்று மடங்காக்கி 355 என்எம்மும் நான்கு மடங்காக்கி 266 என்எம்மும் அளிக்குமாறும் செய்யலாம். நீளச்சார்பிலா ஒளிஇயல் என்னும் புதுத்துறையின் ஒருநிலையாகும் இது. இதில் இயல்பான செறிவுள்ள ஒளியில், புறக்கணிக்க கூடிய செயல்கள்(இலேசரிலிருந்து வருவது போல் கதிர்வீச்சுச் செறிவு அதிகமிருக்குமானால் முக்கியமுள்ளவை யாகின்றன. ஒளியணு ஆற்றல்களைச் சேர்த்து யூவி, எக்ஸ்யூவி கதிர் வீச்சை உண்டாக்குவது ஒரு குறிப்பிட்ட நிலையாகும். 106 யூ.எம் உள்ள நியோடைமியம் இலேசர் ஒளியின் அலைவரிசைகள் 38 என்எம் அலைநீளமுள்ள ஒருங்கிணைந்த கதிர்வீச்சை அளிக்குமளவுக்கு உண்டாக்கப்பட்டுள்ளன. இந்த அலை நீளம் 28வது அலைவரிசைக்குச் சமமானது. மற்றும் இலேசர் முப்பருமக்கோலவியல், இலேசர்நுட்ப நுண்பெருக்கி இயல் முதலிய பல உயரியநுணுக்கங்களும் உள்ளன. இவற்றை 568,10, ஆகிய இயல்களில் காண்க 8. இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் இலேசர் பணி நம்நாடும் இலேசர் வளர்ச்சிப் பணியில் முன்னேறிய வண்ணம் உள்ளது. பல வகை இலேசர்களும் இலேசர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/51&oldid=887024" இலிருந்து மீள்விக்கப்பட்டது