பக்கம்:லேசர் அறிவியல்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 கருவியமைப்புகளும் நம் நாட்டில் செய்யப்படுகின்றன. இவ்வியலில் நம்நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களில் நடைபெறும் இலேசர் பணி என்ன என்பதைக் காண்போம். இந்திய அறிவியல் நிறுவனம் இதன் பணி போற்றத்தக்கது. இதன்பகுதியான சிஐஎஸ்எல் இலேசர் முப்பருமக்கோலத் தொகுதியை அமைத்தள்ளது. இதைக்கொண்டு ஒளியின் அலை நீளத்தில் 120 பங்குக்குச் சிறிய இடப்பெயர்ச்சிகளை அளக்கலாம் இதன் எந்திரப் பொறியல் துறை, இலேசர் எல்லைக்காணியைப் பாதுகாப்புத்துறைக்காக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மின் செய்தித் தொடர்புப்பொறிஇயல்துறை, நிலாப் படங்களைப் பகுக்கும் இலேசரை உருவாக்கிய வண்ணம் உள்ளது. இயற்பியல் துறை நிறமாலை ஆய்வுக்கும் சிதறும் ஆய்வுக்கும் இலேசரைப் பயன்படுத்துவதை ஆராய்ந்த வண்ணம் உள்ளது. நீளத்திட்டங்களை நிறுவுவதிலும் குறுக்கீட்டு அளவிலும் ஈலியம் நியான் இலேசர்களைப் பயன்படுத்துவதில் தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம் நாட்டம் செலுத்திவருகிறது. சீரிய பணி ஏனைய ஆராய்ச்சி நிறுவனங்களிலும் நடைபெறுகிறது. பாபா ஆராய்ச்சி நிறுவனத்தின் இலேசர் பகுதி அ)இலேசர் குறுக்கீட்டுமானியில் சாய் நிகழ்ச்சி: நேர்த்தியாகச் சாணை பிடித்த பரப்புகள், மடித்த உலோகத்தட்டிகள் முதலியவற்றை ஆராய இக்கருவி பயன்படுகிறது. இவை பளபளப்பும், ஒளி ஊடுருவலும் இல்லாத பரப்புகள் உருளைத்தண்டுகள் கூம்பு வடிவத்தண்டுகள் முதலியவற்றின் நேர்தன்மையினை ஆராயவும் இக்கருவி பயன்படுகிறது. ஒரே தடவையில் பெரிய பரப்புகளையும் ஆராய இயலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/52&oldid=887026" இலிருந்து மீள்விக்கப்பட்டது