பக்கம்:லேசர் அறிவியல்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 கான்பூர் இந்தியத் தொழில் நுணுக்க நிறுவன இலேசர் ஆய்வுக் கூடங்கள் அ) இங்குத் துடிப்பு ஆர்கன் இலேசர் அமைக்கப் பட்டுள்ளது. இது 4765.5145ஆங்ஸ்ட்ராம் எல்லையில் இயங்குவது. உச்ச எல்லை ஆற்றல் சில வாட்டுகள். துடிப்பு அகலங்கள் 20.50 மைக்ரோ செகண்டுகள். உத்திரப் பிரதேசத்தில் ஷிகிபா பாத்திலுள்ள மையமின்னணு நிறுவனத்துணையுடன் இஃது அமைக்கப்பட்டது. ஆ இங்கு மாறக்கூடிய புரூய்ஸ்டர் கோணமேல் நிலைப் படிகக்கல் மின்கலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கியைவு நிலைமைகளில் ஒளிர்வு ஆய்வுகளையும் இராமன் சிதறலையும் ஆராய இது உதவும் இ) இயக்கம், மேற்பரப்புக் கரட்டுத்தன்மை, ஒருங்கியைவு, ஒளி உணர்வுமிக்க பொருளின் எம்டிஎஃப் ஆகியவற்றை அளக்க இலேசர்துகள் புகைப்பட நுணுக்கங்கள் பயன் படுகின்றன. இந்த ஆய்வுக்கூடத்தில் மின்னணு இசைக்கவையின் அதிர்வு, சுழற்சி, உள்தள இயக்கம் ஆகியவற்றை அளக்க, இந்த நுணுக்கம் பயன்பட்டிருக்கிறது. ஒளிப்படத்தட்டில் உள்ள இடப்பெருக்கத்தைப் பயன்படுத்தி உள்தள இடப்பெயர்ச்சி அறிகுறியை அறிய, ஒருமுறை கண்டறியப்பட்டுச் சரிபார்க்கப்பட்டுள்ளது. ஆடிகள், ஒளிக்கற்றைப் பிளப்பிகள் ஆகியவற்றின் சிறிய கோணங்களை அளக்க ஃபோரியர் துகள் நுணுக்கத்தை நன்முறையில் பயன்படுத்தலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈ) கூம்பு வில்லைகள், நீள்வட்ட ஆடிகள் ஆகியவை வழக்கத்தில் இல்லா ஒளியியல் பொருள்கள். செலுத்துகை யினையும் மறிப்பினையும் உள்ளடக்கிய முப்பருமக் கோலவியல் இவற்றின் பகர்ப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவற்றை உருவாக்குவது அரிய செயலாகும். இலேசர் முப்பருமப் படத்தினால் உண்டாக்கப்படும் பொருள்கள் விலை குறைந்தவை, இலேசானவை. குறிப்பிட்ட எந்தச் சுட்டளவுகளையும் அவற்றைக்கொண்டு எளிதாக உருவாக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/54&oldid=887029" இலிருந்து மீள்விக்கப்பட்டது