பக்கம்:லேசர் அறிவியல்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சென்னை இந்தியத்தொழில் நுணுக்க நிறுவன இலேசர் செய்தித் தொடர்பு ஆய்வுக்கூடம் அ) இலேசர் கற்றைப் பரவலில் காற்று வெளிக்கொந் தளிப்பு விளைவுகளை அறிய ஆய்வகள் நடத்தப்பட்டுள்ளன. ஆ இலேசர்களைப் பயன்படுத்திக் கூடுதலான உயர் மின்னழுத்தக் கம்பிகளில் மின்னேட்டங்களை அளக்க, ஆய்வுகள் செய்யப்படுகின்றன. காந்த ஒளிப் பொருளுக்கு நெருக்கமாகக் கடத்தி வைக்கப்பட்டு, அதன் வழியாக இலேசர் கற்றைச் செலுத்தப்படுகிறது. இவ்வாறு மின்னோட்டத்தை அளப்பதிலுள்ள நெறிமுஹை பாரடே விளைவு ஆகும். இவ்விளைவைப்படிகக்கல் முதலிய காந்த ஒளிப்பொருள்களில் நன்கு உற்றுநோக்க இயலும். இந்த ஆய்வுகளுக்கு 3 மில்லிவாட் ஆற்றலுள்ள ஈலியம்-நியான் இலேசர் பயன்பட்டது. இந்த ஆய்வு பெல் நிறுவனத்துணையுடன் செய்யப்பட்டது. திருவனந்தபுரம் விக்ரம் சரபாய்வான வெளிமையம் ஒளி முப்பருமக் கோலவியல், ஒளிநீட்சி ஆகியவை வானவெளிக்கலப் பகுதிகளின் அமைப்புப் பகுப்பை ஆராயப்பயன்படுகின்றன. இதற்கு இலேசர் ஒளி, மூலமாகப் பயன்படுகிறது. வானவெளிக் காற்று விரைவு, கொந்தளிப்பு, சுட்டளவுகள் முதலிய காற்று வெளிநிலைமைகளை ஆராயச்சிவப்புக்கல் இலேசர் தொகுதியினையும், சாய இலேசர் தொகுதியினையும் இயற்பியல் பிரிவு உருவாக்கியுள்ளது. இந்தியத் தொழில் நுணுக்க இலேசர் வளர்ச்சிச் செலவு போர்க்கருவி நிறுவனம் இது நாட்டுப் பாதுகாப்பு ஆராய்ச்சி-வளர்ச்சி நிறுவனக்கட்டுப் பாட்டில் உள்ளது. வழிப்படுத்தப்பட்ட எறிபடைகளை இயக்க, இலேசரைப் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. களப்பணிக்கும் நடமாடும் இலேசர் தொகுதியினை உண்டாக்க ஆராய்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/55&oldid=887031" இலிருந்து மீள்விக்கப்பட்டது