பக்கம்:லேசர் அறிவியல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 நடத்தியவண்ணம் உள்ளது. இதற்கேற்ற ஆராய்ச்சி வசதிகள் இங்குள்ளன. மேனாடுகளுடன் ஒப்பிட, இவ்வளர்ச்சிக்காக நாம் செலவழித்திருப்பது மிகச் சிறிதே இருப்பினும், வியத்தகு இலேசர் கற்றையின் அளப்பரிய வாய்ப்புகளை உரிய துறைத்தலைவர்கள் உணர்ந்த வண்ணம் உள்ளனர். என்சிஎஸ்டி குறிப்பிட்டுள்ள முதலிடம் வகிக்கும் 10 செயல்களில், இலேசர் வளர்ச்சியும் ஒன்று என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவியல் தொழில் நுணுக்கத்துறை, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே இலேசர் வளர்ச்சிக்காக ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியத் தொழில் நுணுக்க நிறுவனம், பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம், தில்லி மைய மின்னணு நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவை இத்திட்டத்தில் கலந்து கொள்கின்றன. இத்திட்டத்திற்காக 1976-ம் ஆண்டு வாக்கில் சிஐஎஸ் எல்லுக்கு ரூ.5 இலட்சம் ஒதுக்கப்பட்டது. இந்தியப் பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களின் கருவிப்பாட்டுக் கூட்டுத்திட்டத்திற்கு ஒரு மையமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பிரிட்டன் அல் பல்கலைக்கழகமும் சிஐஎஸ்எல் இணைந்து உயர் ஆற்றல் கார்பன்-டை-ஆக்சைடு இலேசர்களையும் நியோடைமியக் கண்ணாடி இலேசர்களையும் உருவாக்கும். குறிப்பாகக் கார்பன்-டை-ஆக்சைடு இலேசர் தொகுதி பொருள்களின் நுண்பகுப்பை ஆராயவும், இலேசர் பொருள் இடைவினையை ஆராயவும் உருவாக்கப்படும். ஆக, வாய்ப்பிற்கும் வசதிக்கும் ஏற்ப, இலேசர் வளர்ச்சிப் பணிக்கு இந்தியா பாடுபட்டுவருகிறது. அவ்வகையில் அதன் ஆராய்ச்சி நிறுவனங்களின் பணி போற்றிப்பாரட்டத்தக்கதே இலேசரின் அறிவியல் பயன்கள் இலேசரின் பயன்களை இரு பெருந்துறைகளில் அடக் கலாம். ஒன்று அறிவியல்துறை. மற்றொன்று தொழில் நுணுக் கத்துறை. இவ்வியலில் அறிவியல் துறைப் பயன்களைப் பற்றிப் பார்ப்போம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/56&oldid=887033" இலிருந்து மீள்விக்கப்பட்டது