பக்கம்:லேசர் அறிவியல்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 46 இயற்பியல் இயற்பியல் கொள்கையினைச் சரிபார்க்கும் ஆய்வில் இலேசர் குறிப்பிடத்தகுந்த அளவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. காட்டாக, இராமன் விளைவு சரிபார்க்கப்பட்டதைக்கூறலாம். 1935இல் பல கொள்கை நிலை முன்னறிவிப்புகளைச் சர்.சி.வி. இராமன், திரு.என்.எஸ். நாகேந்திரநாத் ஆகியோர் செய்தனர். இவை 1932ல் கண்டுபிடிக்கப்பட்ட இராமன் விளைவு பற்றியவை. திருவாளர்கள் எர்மன் குயூமின்ஸ். நார்மன் நேபிள்.லியோனர்டு கேம்பல், இன் ஏ ஆகியோர் கொலம்பியா பல்கலைக்கழக்கதிர் வீச்சுக்கூட அறிவியல் குழுவினர் ஆவர். இவர்கள் தங்கள் ஆய்வுக்குச் சிவப்பு ஈலிய நியான் இலேசரைப் பயன்படுத்தினர். இந்த ஆய்வு 1963-இல் நடைபெற்றது. கேளா ஒலிகள் நிலைநிறுத்தப்பட்ட தொட்டி நீர்மத்தில், ஒளிக்கற்றை சென்ற பொழுது, அது பல புதிய கற்றை வரிசைகளாகப் பிரிந்தன. கேளாஒலிகளை மாற்றுவதன் வாயிலாக இப்பிரிப்பைக் கட்டுப்படுத்தலாம் என்பதைக் கொலம்பியா பல்கலைக்கழக அறிவியலார் கண்டனர். இவ்விளைவு உயர்விரைவு செய்தியாக்கும் தொகுதி களிலும், ஆய்வு நிலத்தொலைக்காட்சித் தொகுதிகளிலும் பயன் படுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிலிருந்து அது உலகின் பல ஆய்வுக்கூடங்களிலும் ஆராயப்பட்டுள்ளது. இவ்விளைவின் முழுக்கொள்கை இராமன், நாத் ஆகிய ரோல் 1935-36-இல் வெளியிடப்பட்டது. அச்சமயம் வெளியாகிய எல்லா ஆய்வு முடிவுகளையும் அது விளக்கியது. இவ்விளக்கம் சரியானவை என்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும், அக்கொள்கையின் ஒருநிலை,முழுதும் சரிபார்க்கப்படவில்லை. "படு ஒளி கற்றையின் நிறத்திலிருந்து நீர்மத்தொட்டியிலிருந்து வெளியேறும் ஒளிக்கற்றைகளின் நிறங்கள் சிறிது வேறுபடும்" என்று இருவரும் முன்னறிவிப்பு செய்தனர். இவ்வேறுபாடுகள் மிகச்சிறியனவாக இருந்ததால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/57&oldid=887035" இலிருந்து மீள்விக்கப்பட்டது