பக்கம்:லேசர் அறிவியல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சாதாரண ஒளியைக் காட்டிலும் இலேசர் ஒளி அதிகப் பயனுள்ளதாகும். மேலும், டாப்ளர் விளைவினையும் இதனைக்கொண்டு ஆராயலாம். அனுப்பிணைப்பு இதற்கு இலேசரைப் பயன்படுத்த உருசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முயன்று கொண்டுள்ளன. உருசியா:- ஆற்றல் மூலங்களில் மிக்க வாய்ப்புள்ளது. வெப்ப அணுத்தொகுப்பு ஆகும். உலகிலுள்ள அறிவியலார் அனைவரும் வெப்ப அணு வினையினைச் செயற்படுத்த முனைந்த வண்ணம் உள்ளனர். இதற்காக இலேசர் ஆற்றலும் பயன்படுகிறது. உருசியாவில் டால்பின் என்னும் தலைசிறந்த இலேசர் தொகுதி நிறுவப்பட்டுள்ளது. டியுட்ரியம், டிரைடியம் கொண்ட தனி இலக்கில் வெற்றிட அறையில் 5000 ஜோல்கள் மொத்த ஆற்றலுடைய 54 இலேசர் ஒளிகற்றைகள் இக்கருவித் தொகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. இக்கற்றைகள், .0000001 வினாடியில் மிகக்குறுகியதும் ஆற்றல் வாய்ந்ததுமான ஒளித்துடிப்பினை உண்டாக்கவல்லவை. உலகிலுள்ள எல்லா ஆற்றல் நிலையங் களின் ஆற்றல் திறனையும் இவ்வீசுஒளியின் திறன் விஞ்சக்கூடியது. அமெரிக்கா: 1994க்குள் அனுப்பிணைப்பிற்கு இலேசர் ஆற்றலைப் பயன்படுத்த அமெரிக்கா முயலுகிறது. இதற்கு அறுகதிர் சீட்டா இலேசர் தொகுதியைப் பயன்படுத்துகிறது. இது இறுதியாக 24 கதிர் கருவியாகக் காட்சியளிக்கும். இக்கருவித்தொகுதி 67 மில்லியன் பாகை வெப்ப நிலை களில் ஒரு மில்லியன் அல்லணுக்களை உண்டாக்கியது. இவ் வாற்றல் 165 மில்லியன் வாட் இலேசர் ஆற்றல் ஆகும். இந்த ஆற்றல் ஒரு விநாடியின் பின்ன நேரமே நீடித்திருக்கும். அமெரிக்க ராசெஸ்டர் பல்கலைக்கழகமும் லாரென்ஸ் லிவர்பூல் ஆய்வுக்கூடமும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 1977இல் லிவர்பூல் ஆய்வூக்கூடம் 2 டிடபுள்யூ ஆற்றலுள்ள 200 மில்லியன் அல்லணுக்களை இம்முயற்சியில் உண்டாக்கியது. G ヘ/。 ヌAf

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/59&oldid=887039" இலிருந்து மீள்விக்கப்பட்டது