பக்கம்:லேசர் அறிவியல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 இந்த அரிய ஆராய்ச்சியில் ராசெஸ்டர் நிறுவனத்திற்குப் போட்டியாக உள்ளது லிவர்பூல் ஆய்வூக்கூடமாகும். தங்கள் ஆய்வூகளுக்கு இவ்விரு நிறுவனங்களும் நியோடைமியம் கண்ணாடி இலேசர்களைப் பயன்படுத்துகின்றன. ராசெஸ்டர் நறுவனத்தின் 24.கதிர் கருவித் தொகுதிக்கு ஒமேகா என்று பெயர். 1979இல் இது இயங்கத் தொடங்கியது. 30-40 டிடபுள்யூ இலேசர் ஆற்றலை உண்டாக்கும் இத்தொகுதி 100 மில்லியன் அல்லணுக்களை உண்டாக்கவல்லது. ஆஸ்திரேலியா அதிக ஆற்றல் தரக்கூடிய இலேசரை ஆஸ்திரேலியா அறிவியலார் அமைத்துள்ளனர். எதிர்கால ஆற்றல் பிணைப்பு வளர்ச்சிக்கு இது பெருவாய்ப்பளிக்கும். இரு குழுவினரின் ஐந்தாண்டு அராய்ச்சியினால்இது நடந்தேறியது. ஒரு குழுவினர் நியூ செளத்வேல்ஸ் பல்கலைக்கழ அறிவியலார் ஆவர். இதற்குத் தலைவர் பேரா. எயின்ரிச், மற்றொரு இயற்பியல் ஆராய்ச்சிப்பள்ளி அறிஞர்கள் ஆவர். இதற்குத் தலைவர் டாக்டர் லென் ஹலியுஜெஸ், 1978-இல் தேசியப் பல்கலைக்கழகக் குழுவினர் ஒருமுக்கிய ஆய்வினைச் செய்தனர். இதில் குறைந்த செறிவு கணிமத்தால் இலேசர் கற்றை செலுத்தப்பட்டு, அதிக ஆற்றல் உள்ள மின்னணுக்கள் உண்டாக்கப்பட்டன. கட்டிலா மின்னணுக்களை இலேசர் கற்றையில் செலுத்தி, அதனைப்பெருக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய இலேசர் நீளச் சார்பிலா ஆற்றல் கொண்ட கட்டிலா மின்னணு இலேசர் ஆகும். இது பேராற்றலை அளிக்க வல்லது. இஃது அனுப்பிணைப்பைக் கட்டுப்படுத்தி, ஒரு புதிய வழியினை அளிக்கும். இவ்விரு அறிவியலாரும் நீர்வளிபொரான் எரி பொருளைப் பயன்படுத்தி அனுப்பிணைப்பு முறை ஒன்றினை உருவாக்கலாம் என நம்புகின்றனர். இக்கூட்டு எரிபொருளின் நன்மைகளாவன: 1. வேண்டிய அளவு இவை இரண்டும் கிடைக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/60&oldid=887043" இலிருந்து மீள்விக்கப்பட்டது