பக்கம்:லேசர் அறிவியல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.50 2. நிலக்கரி எரிப்பதைவிடக் குறைந்த கதிர் இயக்கத்தை இது உண்டாக்க வல்லது. 3. இதன் ஆற்றலை நேரடியாக மின்சாரமாக மாற்றலாம். எந்த அலை நீளத்திலும் நீளச்சார்பிலா ஆற்றல் இலேசர் தொகுதி இயங்கக்கூடியது. எந்த இலேசரின் வெளியேறு ஆற்றலை அதிக மாக்கவும் அதனைப் பயன்படுத்தலாம். எவ்விதச் சேதமும் இலேசருக்கு இராது. நடைமுறையில் உள்ள இலேசர்களில் இது ஒருசிக்கலாகும். மற்றொரு கட்டிலா மின்னணுப் பிணைப்புத் திட்டத்தைக் கலிபோர்னிய ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்குகிறது. இதில் டியுட்ரியம் எரிபொருளாகும் உருசிய டால்பினிலும் இதுவே எரிபொருள். இதனைக்காட்டிலும் தங்களது திட்டத்தில் குறைந்த ஆற்றலில் அனுப்பிணைப்பினைப் பெறலாம் என ஆஸ்திரேலிய இயற்பியல் அறிஞர்களும் கருதுகின்றனர். வானியல் முன்னரே 2, 38.840 கல் தொலைவிலுள்ள திங்களிலிருந்து இலேசர் கற்றை திரும்பியுள்ளது. அது ஊசி முனைக் கூர்மையுள்ள கற்றையாக வியாழனுக்குச் சென்று வந்துள்ளது. அதன் மறிப்பைப் புவியில் வானியலார் பகுத்துப் பார்த்த பொழுது, வியாழனின் மேற்பரப்புச் சராசரி வெப்பநிலை - 150 எஃப் என்பது புலனாயிற்று. . தவிரத் திங்களின் மேடுபள்ளப் படத்தை உருவாக்கவும் இலேசர் உதவும். வானிலை இயல் காற்று, பனி, மழை, மேகம் முதலியவற்றை ஆராய்ந்து வானிலைத் தகவல்களைத் திரட்ட இலேசர் பயன்படுகிறது. இதற்கு லிடார், ரேடார் ஆகிய கருவிகள் உருவாகியுள்ளன. காற்று, மாசு அடைதலைக்கணடறிய ஜெர்மன் நடமாடும் இலேசர்துப்பாக்கியை உருவாக்கியுள்ளது. இதன் அடக்கவிலை ரூ 9 இலட்சம். புழுதியினையும் அளந்தறியக் கூடியது இந்த இலேசர் நீரியல் விசை கொண்டு இது நிலை நிறுத்தப்படுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/61&oldid=887045" இலிருந்து மீள்விக்கப்பட்டது