பக்கம்:லேசர் அறிவியல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 இத்தாலியின் போ பள்ளத்தாக்கிலுள்ள அணு ஆற்றல் நிலையத்தின் வெளியேறும் மாசின் அளவையும் இது சரிபார்க்கும். இதேபோன்ற மற்றொரு கருவி காற்றிலுள்ள எரிமலைப்புழுதியினை வானிலைக் கண்ணோடு 40 கி.மீ. உயரம் வரை பார்க்கக்கூடியது. கருங்கக்கூறின், வானிலை ஆராய்ச்சிக்கு இலேசர் பெரிதும் பயன்படும். நில அமைப்பியல் இலேசர் நிலநடுக்க வரைவியினைக் கொண்டு நிலநடுக்கங்களைப் பற்றிய தகவல்களை அறியலாம். அவை பற்றி முன்னறிவுப்பு செய்யலாம். வேதிஇயல் குறிப்பிட்டஅலைநீளங்களைக் கொண்ட இலேசர் கதிர்களைக் கொண்டு வேதிவினைகளை உண்டாக்கி அவற்றை விரைவுப்படுத்தலாம். பெரிய கரிமக் கூறுகளில் உண்டாகும் வினைகளில், பக்க வினைகளினால் வேதிமாற்றம் போதுமானதாக இராது. ஆனால், இலேசர் கற்றை பெரிய மூலக்கூறுகளை ஒழுங்காகச் சிதையுறுமாறு விரைவுப்படுத்தித் தேவைப்படும் விளைபொருள்களைக் கொடுக்கும். வேறுபட்ட வேதி வினைகளுக்கு வேறுபட்ட அலைநீளங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு ஒத்திசையம் இலேசர்கள் பெரிதும் பயன்படுபவை. உயிரியல் திண்ம இலேசர் பெரும்பான்மையான உயிரியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிறது. உயர்ந்த செறிவுள்ள ஒளிக்கற்றை கண்ணறை அல்லது திசுவை அழிக்கவல்லது. சாயமேற்ற கட்டிகள் சாயமேற்காக் கட்டிகளேவிட அதிகம் இலேசர் ஒளியினை உறிபவை. குறிப்பிட்ட இலேசர் அலைநீளங்கள் சில நொதிகளின் செயலாக்கத்தைக் குறைக்கின்றன. சில நொதிகள் அவ்வாறு நடப்பதில்லை. இலேசர் நுண்கற்றை கண்ணறையைத் துருவி ஆராயும் கருவியாகும். மைட்டோகாண்டிரியா முதலிய தனிக் கண்ணறை யின் நுண்ணிய பகுதிகளில் இலேசர் ஒளியினைக் குவிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/62&oldid=887047" இலிருந்து மீள்விக்கப்பட்டது