பக்கம்:லேசர் அறிவியல்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இலேசர் ஒளியைக் கொண்டு இரவில் விலங்குகளையும் ஆராயலாம. இலேசரினால் ஒரு மரபணுவை இரண்டாகத்துண்டித்து, மனிதனிடத்து மரபணு மாற்றங்கள் உண்டாக்கிப் பல பயன் களைப் பெறலாம். இத்துறை மரபாக்கம் என்னும் புதிய மரபணுப் பொறியியல் துறையாகும். மருத்துவம் கடந்த காலத்தில் கண்ணிலிருந்து ஒதுங்கிய விழித்திரையினை இணைக்கவும் கட்டிகளைத் தீய்க்கவும் இலேசர்கள் பயன்பட்டிருக்கின்றன. இவை குருதி சிந்தா அறுவை ஆகும். ஏனெனில் இவற்றில் துளை செய்யப்பட்டுக் குருதிக் குழாய்கள் சிதைவடைவதில்லை. சிவப்புக்கல் இலேசரும் ஆர்கன் அயனி இலேசரும் விழித்திரைகளை மீண்டும் இணைக்கப் பயன்படுகின்றன. இதைக்கொண்டு கீறி, விழிவில்லையின் குவிதளத்தில் விழித்திரையைப் பொருத்திப் பார்வைத் தெளிவினை மேன்மை பெறச் செய்யலாம். கண் மிருத்துவத்தில் ஒதுங்கிய விழித்திரையினை இலேசர் ஒளியினால் மீண்டும் விழிக் கோளத்துடன் இணைக்கலாம். இந்த ஒளி ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் உயிர்த்திசுவை உறையச் செய்கிறது. இலேசர் அமைக்கப் பெறுவதற்கு முன், ஒதுங்கிய விழித்திரையினை இணைக்கும் வழக்கமான முறை ஆற்றல்வாய்ந்த பிறை ஒளியைக் குவிப்பதாகும். வெளிப்படுத்தும் காலம் அதிகமாதலால், கண்ணை மறக்குமாறு செய்யவேண்டும். நொடி நேரத்தில் இலேசர் ஒளியினைக் கொண்டு அறுவை நடைபெறுவதால், மறக்கச் செய்யும் மருந்து தேவை இல்லை. . கண் அறுவைக்காக அண்மைக்காலத்தில் இலேசர் துப்பாக்கி அமைக்கப்பட்டுள்ளது. இது கண்ணோக்கியில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அறுவைமிக எளிதாகச் செய்யப்படுகிறது. ஆர்கன் அயனி இலேசர்களும் கார்பன்-டை-ஆக்சைடு இலேசர்களும் குருதிக்கசிவுள்ள நோயளிகளிடம் குருதி இழப்பைக் குறைத்து, அறுவை செய்யப்பயன்படுகின்றன. கார்பன்-டை-ஆக்சைடு இலேசர்கள் கழுத்துப்பகுதியில் புற்றுநோய் உள்ள இடங்களைக் குணப்படுத்தப் பரவலாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/63&oldid=887049" இலிருந்து மீள்விக்கப்பட்டது