பக்கம்:லேசர் அறிவியல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பயன்படுகின்றன. இலேசர் அறுவைக்கு மயக்க மருந்து தேவையில்லை. நீண்ட காலம் நோயாளி மருத்துவ மனையில் இருக்க வேண்டிய தேவையில்லை. 1966இல் நீயூயார்க்கிலுள்ள சின்சின்னட்டி குழந்தைகள் மருத்துவ மனையில் இலேசர் கற்றையினைப் பயன்படுத்தி, ஒரு மனிதனின் தொடையிலிருந்து கட்டி ஒன்றினை மருத்துவர்கள் வெற்றியுடன் நீக்கினர். அறுவைக்கு 15 நிமிடமாயிற்று. கட்டியைச் சுற்றியுள்ள சிறிய குருதிக்குழாய்கள் சிதைக்கப்பட்டபோதிலும், அவற்றிலிருந்து குருதி கசியவில்லை. ஏனெனில், செறிவுமிக்க இலேசர் ஒளிக்கற்றை அவற்றைத் தீய்த்து விட்டது. அறுவை செய்த மூவர்களில் ஒருவர் டாக்டர் தாமஸ் ஈ. பிரவுன். இதனைச் செய்வதற்கு முன்பு எலிகள், முயல்கள், நாய்கள் முதலிய பாலூட்டிகளில் பிரவுன் அறுவை செய்து வெற்றிகண்டார். அறுவை செய்யப்பட்ட நோயாளிக்கு வயது 50. மெலானியத் தோல் புற்றுநோய் அவருக்கு இருந்தது. வெடிப்புகளும் கட்டிகளும் அவர் உடல் முழுவதும் இருந்ததாலும், தொடையிலுள்ள கட்டி மிக நோய்வாய்ப்பட்டிருந்தது. அது அறுப்பதற்கு வசதியான இடத்திலும் இருந்தது. எனவே, அது அறுவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. பெல் ஆய்வுக் கூடம் உருவாக்கிய ஆர்கன் இலேசர் அறுவைக்குப் பயன்பட்டது. டாக்டர் பிரவுன் கருத்துப்படி கல்லீரல், மண்ணிரல், மூளை முதலிய உள்ளுறுப்புகளைக் குருதியின்றி அறுக்கவும் இலேசரைப் பயன்படுத்தலாம். 1965இல் சிதையும் பல்குழிகளை அழிக்க, q3ుతాt5ణ நியூயார்க்கில் சின்சின்னட்டி மருத்துவமனையில் பயன்பட்டது. அதனைத்துல்லியமாகக் குவித்தபொழுது ஒரு பல்லின் சிதைந்த பகுதிகள் அதை உறிஞ்சின. ஒவ்வொரு வெடிப்பும் ஒரு மில்லி செகண்டு நேரமே இருந்ததால், பல் வெப்பமடையவில்லை. பற்சிப்பியும் வெப்பங்கொள்ளவில்லை. நோயைக் குணப்படுத்துவதை விடத் தடுப்பதே மேல் பற்சிப்பியினை மெருகு ஏற்றலாம். அது பல்லினுள் குழிவிழுவதைத் தடுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/64&oldid=887051" இலிருந்து மீள்விக்கப்பட்டது