பக்கம்:லேசர் அறிவியல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 1972இல் இஸ்ரேல் மருத்துவர்கள் 33 மனித அறுவைகளை இலேசரைக் கொண்டு செய்தனர். புற்றுநோய் உறுப்புகளை நீக்கவும் இது பயன்படும். குருதிக் கசிவு இல்லாததால். புற்றுநோய் அணுக்கள் குருதி ஒட்டத்துடன் கலக்கா இருப்பினும், இதில் குணமாகும் காலம் அதிகமாகும். கண், மூக்கு ஆகிய உறுப்புகளுக்கு அருகிலுள்ள மெலிந்த எலும்புகளைத் துளையிடவும் இலேசர் கற்றை பயன்படுகிறது. சுருங்கக் கூறுமிடத்து, மருத்துவர் கைக்கத்தியாகவும் நோயாற்றும் கருவியாகவும் இலேசர் விளங்குகிறது. பல அடுக்கு எக்ஸ்கதிர்ப் படங்களில் முப்பருமப் படங்களை உருவாக்க இலேசர் பயன்படுகிறது. இதனால் நோயுறுப்புகளைப் படம் எடுத்து, நோயின் தன்மையினை எளிதில் அறிய இயலும். இலேசர் அறுவையில் தொடர்ந்து ஆராய்ச்சி நடந்த வண்ணம் உள்ளது. இதன் நோக்கம் இலேசரின் பண்புகளை அறிவதும், அவற்றை அறிவார்ந்த முறையில் மருத்துவத்தில் பயன்படுத்துவதுமாகும். 10. இலேசரின் தொழில் நுணுக்கப் பயன்கள் அறிவியல் பயன்களைவிடத் தொழில் நுணுக்கப் பயன்களே அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுபவை. இறுதியாக, இவ்வியலில் இலேசரின் பலவகைத் தொழில் நுணுக்கப் பயன்களைப் பற்றிக்காண்போம். வழியறிதலும் எல்லை காணுதலும் உயரிய திசைப்பண்பு, ஒற்றை அலைத்தன்மை, குறுகிய விரிவு ஆகியவை இலேசர் கற்றையின் சீரிய பண்புகள். இவை வழியறியவும் எல்லை காணவும் பயன்படுகின்றன. இலேசரைப் பயன்படுத்தி 15 செ.மீ. துல்லியத்திற்குத் திங்களின் எல்லைகண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பல்லோ கப்பல் திங்களில் இறங்க முடிந்தது. இலேசர் கற்றையினைக் கொண்டு செயற்கை நிலாக்களை வழியறியவும் முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/65&oldid=887053" இலிருந்து மீள்விக்கப்பட்டது