பக்கம்:லேசர் அறிவியல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 அளவியல் அதிக அளவுத் துல்லியத்துடன் பல நூறு மீட்டர் நீளத்தை இலேசர் கற்றையினைக் கொண்டு அளக்கலாம், உயரிய துல்லியம் வாய்ந்த எந்திரக்கருவிகளின் இயக்கங்களை நுணுக்கமாக அளக்கவும் இதனைப் பயன்படுத்தலாம். ஒளியின் நிலையான விரைவு ஒருவிநாடிக்கு 186,000 மைல். இதனைப் பயன்படுத்திச் சிறிய மாற்றங்களையும் இலேசர் ஏற்படுத்த வல்லது. ஓர் ஊர்தியின் விரைவினையும் ஒரு பாகையில் ஒன்றரை இலட்சத்தில் ஒரு பங்கு அளவுக்கு இது துல்லியமாக அளக்ககூடியது. அழிப்பான் மின் தட்டச்சுகளில் இலேசர் அழிப்பானைப் பொருத்தித் தவறாகத் தட்டச்சு செய்யப்பட்ட எழுத்துக்களை அழிக்கலாம். தாளில் எவ்விதக் குறையினையும் ஏற்படுத்தாமல், இலேசர் கற்றைகள் தட்டச்சுமையினை வெப்ப ஆற்றலால் அழிக்கும். காற்பங்குக் கலோரிவெப்பமுள்ள ஒளிக்கற்றை இதற்குப் பயன்படுகிறது. பெயர் பொறித்தல் உலோகங்கள், பிளாஸ்டிக்குகள் முதலியவற்றில் பெயர் பொறிக்கவும், எண்ணிடவும், வெட்டுதல், இணைத்தல் முதலிய வேலைகளைச் செய்யவும் தானியங்கு இலேசர் பயன்படுகிறது. இது திண்ம அல்லது வளி இலேசரே. கட்டுப்படுத்தப்படும் கணிப்பொறியில் எண்ணுள்ள எழுத்துக்கள் அகரவரிசையில் நிரல்படுத்தப்படுகின்றன. பலகையிலுள்ள சாவிகளை அழுத்துவதன் மூலம் அல்லது தாள் நாடாமூலம் தேவையான தட்டச்சுச் செய்தி உள் அனுப்பப்படுகிறது. பெயர் பொறித்தல், ஒய்ஏஜி திண்ம இலேசரால் நடைபெறுகிறது. இதில் ஒளி விலகு தொகுதி பொருத்தப்பட்டுள்ளது. தவிர, இரு ஆடிகளும் உள்ளன. இலேசர் ஒளிக்கற்றை எழுத்துகளை வேலைத் துண்டுகளாக எரிக்கிறது. இதனால் ஏற்படும் பெயர்ப்பொறிப்பு நிலையாக இருக்கும். இதுவே இலேசர் அச்சுக்கோவை ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/66&oldid=887055" இலிருந்து மீள்விக்கப்பட்டது