பக்கம்:லேசர் அறிவியல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பிளாஸ்டிக்குள், உலோகங்கள் ஆகியவற்றை வெட்டுவதற்கும் இணைப்பதற்கும் அதிக ஆற்றலுள் கார்பன்-டை-ஆக்சைடு இலேசர் பயன்படுகிறது. இலேசர் காட்சி இது மக்கள் மகிழ வாணிப அளவில் நடைபெறுகிறது. இக்காட்சி 1971இல் லாஸ் ஏஞ்சலில் தொடங்கியது. இதனை 35 இலட்சம் மக்களுக்கு மேல் கண்டு களித்துள்ளனர். கோஸ் காட்சியகத்திரையில் ஒளிர்வான வெளிக்கோட்டு உருவங்கள் தோன்றிக் காண்போரை மகிழ்விக்கும். இதுவே இலேசர் காட்சி இக்காட்சி கிரிப்டான் இலேசரால் நடைபெறுகிறது. இதிலிருந்து வெள்ளொளி முப்பட்டைக்கண்ணாடிக்குச் செல்லுகிறது. வெளியேறும் ஒளி நான்கு நிறங்களாகப் பிரிகிறது. அவை நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை என்பனவாகும். இரு கணிப்புப் பொறிகளால் இது கட்டுப் படுத்தப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/67&oldid=887057" இலிருந்து மீள்விக்கப்பட்டது