பக்கம்:லேசர் அறிவியல்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ஆடிகளால் ஒவ்வொரு நிறமும் காட்சியாகத் திரையில் மறிக்கப்படுகிறது. அப்பொழுது உருவங்கள் கண்ணுக்கு நன்கு தெரியும். ஒரு விநாடிக்கு 20 தடவைகளுக்கு மேல் வரை படங்கள் வழியாக ஒளியை விரைவாக ஆடிகள் செலுத்துவதால், அவை நிலையான உருவங்களாகக் காண்பவருக்குத் தெரியும். பொருள்களை ஆக்கல் செறிவு மிக்கது இலேசர் ஒளி. ஆகவே, அது வயிரம், குருத்தக்கல், தனிவகை உலோகக் கலவைகள், எளிதில் உருகாத பொருள்கள், தேய்ப்புப் பொருள்கல் முதலிய மிகக் கடினமான பொருள்களை வெட்டவும், வடிவப்படுத்துவும், துளையிடவும் பயன்படுகிறது. வழக்கத்திலுள்ள கருவிகளைக்கொண்டு இச்செயல்களைச் செய்ய இயலாது. காட்டாக, மாஸ்கோ ஆராய்ச்சி நிறுவனம் இலேசர் துளையிடும் எந்திரத்தை உருவாக்கியுள்ளது. 0.1 விநாடியில் கம்பிஇழுக்கும் வயிர அச்சுகளை இதனைக்கொண்டு துளையிடலாம். நொறுங்கும் பொருள்களிலும் இது துளையிட வல்லது. பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று இலேசர்-ஆக்சிஜன் உலோக வெட்டும் எந்திரத்தை உருவாக்கியுள்ளது. இதனைக்கொண்டு எவர்சில்வர், டிட்டானியம் முதலிய உலோகங்களை வெட்டலாம். நேர்த்தியான ஒளிக் குவிப்பு இருப்பதால், இலேசர், உலோகங்களைத் துல்லியமாகவும் துப்புரவாகவும் வெட்டுகிறது. திட்டப்படுத்தப்பட்ட இலேசர் வெட்டியைக் கொண்டு தோல்,துணி, எஃகு, மரம், பிளாஸ்டிக், அட்டை, மட்பாண்டங்கள் முதலிய பொருள்களையும் வெட்டலாம். சுழலும் பகுதிகளிலிருந்து தேவைக்கு அதிகமுள்ள உலோகத்தை நேரடியாக நீக்குவதால், துல்லியப் பொறி நுட்பங்களை விரைவாகச் சமன்செய்ய இலேசர் உதவுகிறது. ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்திற்கு இலேசர் துடிப்பைக் கட்டுப்படுத்த இயலுமாதலால், நுண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/68&oldid=887059" இலிருந்து மீள்விக்கப்பட்டது