பக்கம்:லேசர் அறிவியல்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இணைப்புகளுக்கும் பற்றவைப்பு வேலைகளுக்கும் அழகு படுத்தும் வேலைக்கும் அதனைப் பயன்படுத்த முடிகிறது. முப்பருமக் கோலவியல் குறுக்கீட்டு விளைவுகளில் முப்பருமப்படத்தை உருவாக்கலாம் என்னும் கருத்தை 1947இல் முதன் முதலில் உருவாக்கியவர் பிரிட்டிஷ் அறிவியலார் டென்னிஸ் கேபர். ஆனால், இலேசர் வந்த பின்பே உயர் தன்மையுள்ள முப்பருமக் கோலவியல் உருவாகமுடிந்தது. இது புதிய புகைப்பட நுணுக்கமாகும். இதற்குப் பொருளருகு வில்லைகள் தேவை இல்லை. பொருளிலிருந்தும் ஆடியிலிருந்தும் மறிக்கப்பட்ட ஒளிக்கற்றைக்கு நடுவே, குறுக்கீட்டுக்கோலம் ஒளிப்படப் பொருளில் இதில் பெறப்படுகிறது. இக்குறுக்கீட்டுக் கோலத்திற்கு முப்பருமக் கோலன் என்று பெயர். இது சாதாரணபப்புகைப்பட மூலத்திற்குச் சமமானது. . இப்பொழுது முதல் ஒப்பீட்டுக்கற்றையின் அதிர்வெண் கொண்ட இலேசர் ஒளிக்கற்றை, முப்பருமக் கோலன் வழியாகச் செலுத்தப்பட்டு ஒளிப்படத்தட்டில் விழுமாறு செய்யப்படு வதால், பொருளின் உண்மையான முப்பரும உருவம் மீண்டும் உருவாகிறது. ஒரு தனி முப்பருமக் கோலனில் பல உருவங்களைப் பதிவு செய்யலாம். மீண்டும் இவற்றை உண்டாக்கும்போது அவை ஒன்றுடன் மற்றொன்று குறுக்கிடுவதில்லை. ஆக, மிகக் குறுகிய இடத்தில் செய்திகளை ஒளிச்சேமிப்பு செய்யவும் சிறந்த கருவியாக முப்பருமக் கோலன் உள்ளது. இச்செய்தினை மீண்டும் திரிபுக் குறைவுடன் உண்டாக்கலாம். கேளிக்கையிலும், தொழில் துறையிலும், இலேசர் ஒளிக்காட்சிகளிலும் முப்பரும நுண்பெருக்கி இயல் வியத்தகு விளைவுகளை உண்டாக்கும். முப்பரும நிறத் தொலைக்காட்சியும் திரைப்படமும் எதிர்காலப் பயன்களாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/69&oldid=887061" இலிருந்து மீள்விக்கப்பட்டது