பக்கம்:லேசர் அறிவியல்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| முன்னுரை @GಖHf ஈடு இணையற்ற புனைவு ஆகும். 1950இல் இலேசர் ஆராய்ச்சி தொடங்கியதும் இவ்வாண்டிலிருந்து 40 ஆண்டுகட்கு மேற்பட்ட முறையான அறிவியல் வரலாறு இதற்குண்டு. நம் எதிர்பார்ப்புகளுக்கு மேலாகப் பல வியப்புகளுக்குரியது இலேசர். டிரான்சிஸ்டர் என்னும் படிகப் பெருக்கிக்குப் பிறகு 40 ஆண்டுகளில் இந்த அளவுக்கு எந்தக் கருவியும் வளர்ந்ததாக வரலாறு இல்லை. மேலும், அறிவியல் வரலாற்றில், இலேசர் ஆராய்ச்சி போன்று பல நோபல் பரிசுகளைப் பெற்ற ஆராய்ச்சி மிகக் குறைவாகவே இருக்க இயலும். உண்மையில் இந்த விரைந்த வளர்ச்சி, பல துறைகளில் அதன் ஒளிமயமான நல் வாய்ப்பு களையே காட்டுகிறது. உண்மையினைக் கூறின், பல அறிவியல் துறைகளில் அது குறிப்பிடத்தக்க புரட்சியினை உண்டாக்கி வருகிறது. இலேசர் அறிவியல் என்னும் இந்நூல் மக்கள் பதிப்பாக எழுதப்பெற்றுள்ளது. சராசரி வாசகருக்கு வேண்டிய செய்திகள் மட்டும் இதில் கூறப்பெற்றுள்ளன. தமிழில் இலேசர் அறிவியல் பற்றி முறையாகவும், முழுமை யாகவும் தொகை வகை செய்து எழுதப்பெற்ற முதல் நூல் இதுவே. அண்மைக்காலத்தில் வளர்ந்த அரியதும் புதியதுமான அறிவியல்களுள் இலேசர் அறிவியலும் ஒன்று. இவ்வறிவினை வளர்தமிழும் பெறவேண்டும் என்னும் பெருநோக்கினால் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. பல தலைவாய்களிலிருந்து திரட்டப் பெற்ற செய்திகள் முழுமை யான பகுப்பிற்குப்பின், இந்நூலில் பயன்படுத்தப் பெற்றுள்ளன. இலேசர் பற்றி அனைவரும் அறிய இது ஒரு சிறு கலைக் களஞ்சிய மாக அமையும். எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அறிவியல் கருத்துகள் தெளிவுடனும் படத்துடனும் விளக்கப் பெற்றுள்ளன. இலேசர் கருத்து அரிய தொழில் நுட்பமுடையது. இஃது இந்நூலில் பத்து இயல்களில் வரலாறு, அறிவியல், தொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/7&oldid=887063" இலிருந்து மீள்விக்கப்பட்டது