பக்கம்:லேசர் அறிவியல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 செய்திப்போக்குவரத்து வெற்றிடக்குழாய், டிரான்சிஸ்டர் ஆகியவை மின்னோட்டத்தைப் பெருக்குபவை. ஆனால், இலேசர், வானொலி அலைகள் அல்லது ஒளியலைகளைப் பெருக்கும் முதல் கருவியாகும். வானொலி அலைகள், தொலைக்காட்சி அலைகள், ரேடார் அலைகள் போலவே, ஒளி அலைகளயும் இலேசர் பயன்படுத்துகிறது. மின்காந்த அலைகளின் அதிர்வெண் அதிகமானால், அலைநீளம் குறைந்து செய்தி தாங்கும் திறன் அதிகமாகும். இலேசரை அதிர்வெண் ஏற்றியாகப் பயன்படுத்திச் செய்திகளைக் கொண்டு செல்லுமாறு செய்யலாம். நம் நாட்டில்டிராம்பேயிலுள்ள அணு ஆற்றல் நிறுவனத் தின் மின்னணுத் துறையினர் கேலியம் அர்சனைடு செய்தித் தொடர்பு இலேசரை அமைத்துள்ளனர். டிராம்பேயிலுள்ள செலுத்திக்கும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள பெறுவிக்கும் இடையே 20 கி.மீ தொலைவில் இச் செய்தித் தொடர்பு நிலைநாட்டப்பட்டது. இதனால் இவ்விருநிறுவனங்களுக்கிடையே இலேசர் செய்தித் தொடர்பு இணைப்பு நிலையாக ஏற்பட வாய்ப்புஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி, உலகில் எப்பகுதியிலும் நடைபெறும் தொலைபேசி உரையாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகிய எல்லாவற்றையுமே ஒரே சமயத்தில் ஒர் இலேசர் கற்றை அனுப்ப இயலும், வானொலி பேசிகளில் ஒலியும் தொலைக்காட்சிக் குழாய்களில் படங்களும் உண்டாகும். இலேசர் மின்மாற்றி, ஒளி அலைகளை மின்னோட்டமாக மாற்றுகிறது. 15,000 அடி உயரத்தில் ஒவ்வொரு 100 கல்களுக்கும் இடையே பலூன்களை வரிசையாக அமைத்து உலகச் செய்திப் போக்குவரத்துச் சிக்கலைத் தீர்க்கலாம். நில நிலாக்களைப் பயன்படுத்துவதை விட இது சிக்கனமானது. ஒரு பலூனிலிருந்து மற்றொரு பலூனுக்குச் செல்லும் இலேசர் ஒளிக்கற்றைகள் ஆயிரக்கணக்கில் புதிய தொலைபேசி வழிகளையும் தொலைக்காட்சி வழிகளையும் அளிக்கும். பலூன்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள், வழியறி தொகுதி, இலேசர் ஆகியவற்றிற்கு வேண்டிய ஆற்றலை அளிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/70&oldid=887065" இலிருந்து மீள்விக்கப்பட்டது