பக்கம்:லேசர் அறிவியல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 7) திருத்துவதற்குரிய அச்சுப்படியே அச்சியற்றியது போல் இருக்கும். 8) அச்சுக்கோவை கையில் இருப்பதால் மறுபதிப்பு மிக விரைவில் கொண்டுவரலாம். 9) ஒரு சிறு அறை போதுமானது. 10) பழைய முறை அச்சுவார்ப்பு இதில் இல்லை. கடத்துகுறிப்பிகள் இவை ஆற்றல் கட்டுப்பாட்டுக் கருவிகளில் இருப்பவை. டியூபான் சைட்டல் நைலான் பிசினிலிருந்து செய்யப்படுபவை. இப்பிசினின் நிறமிலேயே இவை அச்சிடப்படுகின்றன. இப்பிசின் நியான் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அயல் நாட்டு வெயில்டுமுல்லர் என்னும் நிறுவனம் இதை 1992 இல் அறிமுகப்படுத்தியது. இக்குறிப்பிகள் நிலையான பாதுகாப்பு அமைப்பை பெற்று இருக்கும். ஒலி-ஒளித்தட்டு நெருங்கமைதட்டு என்பது மெல்லிய தகடுகள் கொண்ட ஒலித் தட்டு. இதன் மூலம் சிறந்த முறையில் இசை கேட்கலாம். இலேசர் தட்டு என்பது ஒளித்தட்டு. இது ஒரு நுண் பேழை. இதற்குரிய போட்டுப் பார்க்கும் பெட்டி மூலம் திரைப்படங்களைப் போட்டுத் கண்டுகளிக்கலாம். இப்பெட்டியின் விலை ரூ.30,000. இது 33 மிமீ இசைத் தட்டு அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு தட்டின் விலை ரூ 2000, போகப் போக இவ்விலை குறையும். இதுவரை ஆங்கிலப் படங்களே அதிகம் வந்துள்ளன. அடுத்து இந்திப் படங்கள், தமிழில் விரைவில் வெளி வரும் புரோலேஸ் 3015 இது மூவச்சு கொண்ட இலேசர் எந்திரம். இதில் கரி இரு ஆக்சைடு இலேசர் பயன்படுகிறது. பொருள்களைத் துண்டிக்க, துளையிட, பற்ற வைக்கப்பயன்படுவது. பங்களுர் எச்எம்டி உருவாக்கி 1993 இல் பயனுக்கு வந்தது. மரம், பிளாஸ்டிக், தோல், உலோகம் முதலிய எல்லாப் பொருள்களையும் இதைக் கொண்டு முறையாக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/73&oldid=887071" இலிருந்து மீள்விக்கப்பட்டது