பக்கம்:லேசர் அறிவியல்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 வரம்பும் வாய்ப்பும் 1960 இல் இலேசர் உருவானது. அதற்குப்பின் அதன் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி அறிவியலிலும் பொறியியலிலும் வியத்தகு முன்னேற்றத்தை உண்டாக்கியுள்ளது. இதனால் புதிய கருத்துக்களும் கருவியமைப்புகளும் நுணுக்கங்களும் உருவாகியுள்ளன. கருத்துக்கு நீளச்சார்பிலா ஒளி இயலும், கருவியமைப்புக்கு ஒத்திசையம் இலேசரும், நுணுக்கத்திற்கு முப்பருமக் கோலவியலும் சிறந்த எடுத்துக்காட்டுகள். இலேசருக்கு நிறைந்த வாய்ப்புகள் இருப்பினும் அவ்வாய்ப்புகளுக்குரிய வரம்புகளும் உள்ளன. டிரான்சிஸ்டரைப் போன்று இலேசர், தொழில் துறையில் உச்ச நிலையை அடையவில்லை. அறிவியலும் தொழில் நுணுக்க இயலும் கைகோத்துச் செல்லாததே இதற்குக் காரணமாகும். இலேசர் அறிவு, தொழில்நுணுக்கம் ஆகிய இரண்டிற்குமிடையே அகன்ற இடைவெளி உள்ளது. இதற்குப் பொருளியல் தடையும் தொழில் நுணுக்கச் சிக்கல்களும் காரணங்களாகும். இத்தடைகள் நீங்கின், டிரான்சிஸ்டரைப் போன்று அதுவும் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் என்பதில் அட்டியில்லை. இலேசரின் அளப்பரிய ஆற்றல் இன்னும் விரிவாக அறியப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளது. இருப்பினும் அடுத்த பத்தாண்டுகளில் அவை நிறை வேற்றப்படலாம். அப்பொழுது இணையற்ற இலேசரிலிருந்து அளவிலா நன்மைகளை நாம் பெறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/74&oldid=887073" இலிருந்து மீள்விக்கப்பட்டது