பக்கம்:வகுப்புரிமைப் போரட்டம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்புக்குப்பின் கட்டி, வரிசை வரிசையாகக் கிளம்பி, வானளாவ முழக்கமிட்டு, வரிப்புலிகளெனக் காட்சியளித்தது கண்டு, ஆதிக்கவாதிகள் திகில்கொண்டு, அச்சத் திற்கும் ஆசைக்கும் இடையிலே ஊசலாடுகின்ற னர் இன்று. றது. 'அவர்களுடைய மனம் ஜெயபேரிகை கொட்டுகிறது.. நாவோ, அதை வெளியிடத் துடித்து விளைவை எண்ணி மென்று விழுங்குகின் அவர்களது ' மூளை, வெற்றியை விவரிக்க, புதிய புதிய தொடர்களையெல்லாம் நினைவு படுத்து கின்றது. கைகளோ - தீட்டுதற்கு அஞ்சுகின் றன, தம் எண்ணம் வெளிப்பட்டுவிடக்கூடாதே என்பதால், தமது இனத்தின் வெற்றிக்களிப்பும் பூரிப்பும், வெளியே பரவினால், மாற்றினத்தின் மரமண்டைகளும் மண்பொம்மைகளுங்கூட உண் மையை உணர்ந்து, உரிமைப்போரில் பங்கு கொண்டு எதிர்ப்புச் சக்தியை, புரட்சித் தீயாக வளர்த்துவிடுவரே என்ற அச்சமே, ஆதிக்கவாதி களின் நாவையும் கையையும் ஆடாமல் அசையா மல், ஆரவாரமின்றியே அடங்கிக்கிடக்கச் செய் துள்ளது. காவலுக்கு வைக்கப்பட்டவனே நடுநிசியிலே மாளிகையிலே நுழைந்து, தலையணைக் கடியிலே இருந்த சாவிக் கொத்தையும் எடுத்து, இரும்புப் பெட்டியையும் திறந்து, பொருள் குவியலை அள்ளி மடியில் கட்டித் திரும்புகையில் கால் இடறியதால் செம்பு உருண்ட சப்தம் கேட்டு வீட்டுக்குரியவன் விழித்துக்கொண்டு, காவல்காரனைக் கூப்பிட, அவனோ, அதே இரும்புப்பெட்டிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுள்ளதைப் போன்றுதான், இன்று, வாய்மூடி மௌனிகளாக, இமை மூடாக் கண்ணினராகக் காட்சியளிக்கின்றனர் ஆதிக்க வாதிகள்