பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏毒芸 வசந்தம் மலர்ந்தது நேரம் ஆக ஆக அவருக்கே தெளிவற்ற ஒரு நிலை அவரை ஆட்டிவைத்தது. உள்ளத்தில் அர்த்தமற்ற குழப்பம். ஏக்க மும் கவலேயும் சுழன்று நெளிந்தன. எதையாவது, அல்லது யாரைவது, பிடித்துக் கசக்கிக் குலுக்கவேண்டும் என்ற கொதிப்பு எழுந்தது, வளர்ந்தது. யாரையாவது என்பது மாறி, ராஜத்தைத் தொட்டுப் பிடித்துக் கட்டி இன்புற வேண்டும் என்ற வெறியாக உரு வெடுத்தது. அவர் உள்ளம் கொதித்தது. உடல் கொதித்தது. தேக நரம்புகளிலே ஒடிய ரத்தம்கூடக் கொதித்துப் புரண்டு கும்மாளியிட்டுச் சீறிப் பாய்ந்ததுபோல் தோன்றியது அவருக்கு எதிலும் அவர் கருத்து செல்லவில்லை. வேலை ஒடவில்லை. தாக்கமும் வரவில்லை. நாற்காலியில் சாய்ந்து கிடந்தார். அமைதியில்லை. எழுந்து நடந்தார். குளத்தங்கரைப் பக்கம் போளுர், குளிர் காற்றிலே குளிக்கலா மென்று. அந்தி நேரமோ அவர் வெறி யைத் தூண்டிவிட்டது. * இருள் மெது மெதுவாக ஊர்ந்து வந்து, லபக்கென்று. உலகையே விழுங்கிவிட்டபோது, அவர் உள்ளத்திலே வெறித்தனமான முடிவும் வேரோடிவிட்டது அதுதான் சரி. இன்றே, இந்த இரவிலேயே......ராசாத்தி தனியாகத் தானிருப்பா...இப்போ நீலாவதி இருக்கமாட்டாளே! சரி சரி..." - தொடர்பற்ற எண்ணப் பொறிகள் தெறித்தன அவர் மனதில், அவர் விரைந்தார், வேட்டை நாய் போல. எலி இருக் கும் இடமறிந்து லாகவமாகப் பதுங்கிப்போய் பாய்கிற பூனே மாதிரி, அவர் சும்மா சார்த்தியிருந்த வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு, மெதுவாக நடந்தார். கண்களுக்கு இருட்டு பழகிப்போகும் வரை நின்ருர், அவர் விழிகள் இருளிலே துழாவின் முத்தொளிச் சிறு விளக்கு வீட்டில் யாரும் இல்லே என்று சொன்னது. ராஜம் தூங்கிய இடத்தையும் காட்டி யது. அந்தக் குத்து விளக்கின் சுடர் சிறிது ஆடியது. படபட வெனப் பொறி தெறித்தது. திடுக்கிட்டுப் போளுர் சிவகுரு நாதப்பிள்ளை.