பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. வெம்பா செங்குளம் ஊர் உறக்கத்தில் ஆழ்ந்துகிடந்தது. அமைதி நிறைந்த அந்தக் கிராமத்தில் பனி நன்கு விழுந்து கொண்டி ருந்தது. குளிர், நடுக்குகிற குளிர் கட்டிடங்களுக்குள் கால் கைகளே ஒடுக்கிக் கிடப்பவர்களைக் கூட ஆட்டி நடுக்கி, போர்வையை இழுத்துப் போர்த்தி முடங்கும்படி செய்கிற குளிர். வீதிகளில் வெளிச்சமில்லை. பொய்யான காலைத் தோற் றத்தின் வெளிறலோடும் பணியின் புகைப்பண்பும் கலந்திருத் ததனுல் மங்கலொளி கூடப் பரவவில்லே. வானிலே, இரவு முழுவதும் கேளிக்கைகளில் ஈடுபட்டுக் களைத்துப் போனவர் களின் வெளிறிய கண்கள் போல, நட்சத்திரங்கள் பூத்துக் வானத்தைப் பார்த்த சிவகுருநாதபிள்ளே அது என் ேைட சுந்தா, விடிவெள்ளியா? என்று கேட்டார். கைகளால் உடலேப் போர்த்து, உடன் நடந்த பந்தல் காரன் சொன்னன்: அதுக்குள்ளாற விடிவெள்ளி வந்திரவா செய்யும் சண்டாள வெள்ளியில்லா இது! மோசம் பண்ணு கிற செட்டி வெள்ளி. அவன் இயல்பாகச் சொன்னன். ஆனல் அவர் மனதில் அது தைத்தது ஆசைகாட்டி மோசம் செய்யும் தன் செயலே அவன் சொல் குத்துகிறதோ என்று அரிப்பெடுத்தது. சிறிது நேரம் அவர் பேசவே யில்லை,