பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 盏”等 இருவரும் மெளனமாக நடந்த பாதையில் பணியின் ஈரம் படிந்தது. இந்த வருசத்தைப் போல பணியை நான் பார்த் ததே யில்லை. சே!” என்று சொல்வி பண்ணையார் திரும்பிப் பார்த்தார். ஏன் டேய், துண்டை எடுத்துப் போர்த்திக் கிடப்படாது?. சும்மா மேலே மூடிக்கோ. என்ன மரியாதை பார்க்க வேண்டியிருக்கு: என்றுள். அவன் தயங்கித் தயங் கியே துண்டை இடுப்பிலிருந்து அவிழ்த்து, முக்காடாக மூடி இழுத்துப் போர்த்திக்கொண் டான். - 'கந்தா, என் மேலே நீ வருத்தம் கொள்ளக் கூடாது நான் நினைக்கலே இப்படி நடக்குமென்று. இல்லே, ஏதோ ஒரு காரியத்தை நாம் செய்யிதோம் அது இப்படி முடியும் என்ரு தெரியுது நமக்கு? அது தான் சொல்வி வச்சான், நாமொண்னு நினைக்க தெய்வம் ஒண்னு நி ைக்கும்னு கேட் டியா? ஊம்...என்னவோ இப்படி முடிஞ்சிட்டுது. கந்தா, நீ ......” என்று புலம்பிக் காண்டே வந்தார் பண்ணையார் . "அதெல்லாம் ஒண்னுமில்லே, எசமான். நான் உங்க சோத்தைத் திண்ணு வளந்தவன். உங்க கட்டளேப்படி நடக்க வேண்டியவன் என் ஐயாவையும், எங்க குடும்பத்தையும் நீங்க காப்பாத்தினதுக்கு என் உடலே செருப்பாகத் தைச்கப் போடலாமே உங்களுக்கு. நீங்க இப்படி என்ணேத் தெரியா தது மாதிரி..." அவன் பேச்சு அவருக்கு அழுகையை உண்டாக்கும் போலிருந்தது. அதுக்கில்வே கந்தா...' என்று ஆரம்பித் தார். மனக் குழப்பத்தினுலோ, அல்லது என்ன காரணத் தாலோ, பேச்சை அந்தரத்தில் விட்டுவிட்டார். கந்தா. பணத்தை பத்திரமா வச்சுக்கிட்டியா? என்று கேட்டார். ஊம்’ என்ருன் அவன். "சரி, இப்ப இந்த நூறு ரூபா போதும் கொளும்புக்குப் போனதும் எப்ப பணம் வேணும்னு இருந்தாலும் எனக்கு எழுது. என்ன தெரிஞ்சுதா? -