பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 175 அமைதியைக் கிழித்து வந்து நின்றது கார் ஒன்று. இரு ளைக் கிழித்து-பார்ப்பவர்களின் கண் கூசும்படி-கதிரெறி யும் கொள்ளிக் கண்கள் மரமண்டையிலே பட்டது. கோயில் சுவரிலே பட்டது அணைந்தது. அப்போ கந்தா, போயிட்டு வாறியா? சரி என்ருர் பண்ணையார். வாறேன் எசமான்' என்று கும்பிட்டுவிட்டு காரில் ஏறினன் கந்தத்தேவன். - அதே காரிலிருந்து ஒரு ஆளும் கீழிறங்கியது. இது யாரு? என்று கவனித்தார் பண்ணையார். மோட்டார் அலறிநகர்த்து ஒடி மறைந்தது. . முன்னுல் நகர்ந்தவனே இனம் கண்டு கொண்ட பின்ன "அடே நம்ம ரத்னமா என்னடே தம்பி எங்கே போயிட்டே..? ஊம்...சரி, வீட்டுக்குப் போ' என்று அனுப்பி வைத்தார். 'மாப்பிளைப் பிள்ளையாண்டானும் வந்திட்டான். போகட் டும்!" என்று ஆசீர்வதிப்பது போல் சொல்லிக் கொண் 亚一打f了。 அவர் மனதில் படிந்திருந்த பெருஞ்சுமை இறங்கி விட் டது போலிருந்தது. சரி, போயி சுகமாகப் படுத்துத் தூங்க வேண்டியதுதான். ரெண்டு மூணு நாளாகவே நல்ல துர்க்க மில்லை என்று நினைத்தபடி வேகமாக நடந்தார்...... இப்போது கீழ்வானிலே விடிவெள்ளி சிரித்து மினுக் கியது. பனி பெய்து கொண்டு தானிருந்தது. அங்கொரு காகமும் இங்கொரு கோழியும் விழிப்புக் குரல் கொடுத்தன. தாண்டவராய பிள்ளை சுகமான தூக்கத்தில் புரண்டு கொடுத்ததால் நார்க்கட்டில் கிரீச்சிட்டது. வேறு அறையில் படுத்திருந்த பையன் சுந்தரம் அம்மா’ என்ருன். பக்கத் திலே கையால் துழாவிப் பார்த்தும் அன்னையைக் காணுத தால் அம்மா என்ருன் மீண்டும்,