பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வசந்தம் மலர்ந்தது கண்கள் போல் நட்சத்திரங்கள். அவற்றிடையே ஜாஜ்வல்ய ஒளி சிதறும் பெரிய வெள்ளி ஒன்று. ‘விடி வெள்ளியா அது! இராதே! விடிய இன்னும் நேரம் கிடக்குதே என்றது பண்ணையார் மனம், கெட்டி வெள்ளி யாகத்தான் இருக்கும்!’ என்று அனுபந்தம் இணைத்தது பிறகு. கால் செருப்பு டப், டிப் என ஒலிக்க வீடு நோக்கி நடந்தார் பண்ணையார். நீலாவதி நல்ல நல்ல கல்யாணம் தடத்தத் துணிஞ்சாளே மகளுக்கு?’ என்று நினைத்தார். சிரித் தார், லேசாக வாய்விட்டுச் சிரித்தார். அவர் சிரிப்பை ரசிக்க அங்கு ஆள் தானில்லை!