பக்கம்:வசந்தம் மலர்ந்தது.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 53 தேன்னு வருத்தம் ஏற்பட்டிருக்கும். மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருந்திருக்கும். நமக்கு இல்லையா-அது மாதிரித் தானே ரத்னத்துக்கும். அதனுலே சொல்லாமலே எங்கே யாவது போயிருக்கும் தம்பி, இன்னும் ரெண்டு மூணு நாளிலே வந்திரும்’ என்ருள். அவள் சொன்னதில், அவ ளுக்கே நம்பிக்கை இல்லை. வர வேண்டும். ரத்னம் வரா மலா போவான். வருவான்’ என்று திரும்பத் திரும்ப உருப் போட்டுக் கொண்டிருந்தது அவள் மனம். 'அம்மா, பந்தல்லே தீ யாராவது வச்சிருக்கணும்னு தான் எனக்குத் தோணுது. வாணப்பொறி பட்டா புடிச் சிருக்கப் போவுது?’ என்று தன் கருத்தை வெளியிட்டாள் மகள். நீலாவதி லேசாகச் சிரித்தாள். வறண்ட சிரிப்பு அது. "யாரம்மா தீ வைக்கப்போரு. நமக்கு வேண்டாதவங்க யாரும் இருக்கறதா எனக்குத் தெரியலே அப்படியிருந் தாலும், கல்யாணப் பந்தலிலே தீ வைக்கக் கூடிய அள வுக்கு...” - - "சொந்த லாபம் எதையாவது உத்தேசித்து அப்படி வச் சிருக்கலாமில்வியா? என்று தாயின் முகத்தைப் பார்த்தபடி கேட்டாள். நீலாவதி அவளை நோக்கிளுள். ஏன் கண்து உனக்கு இந்தச் சந்தேகம்? என்று விசாரித்தாள். 'விசேஷமா ஒண்ணுமில்லே, என் மனசிலே என்னவோ, பட்டுது கேட்டேன். அதிலும் அந்தச் சொப்பனம் திரும்பத் திரும்ப வந்து பயமுறுத்தினதினலே, என்னவோ அர்த்த மிருக்குன்னு எனக்குப் படுது.” தாய், மகளையே அவள் முகபாவத்தையே கவனித்தபடி திகைத்திருந்தாள். ராஜம் மேலும் சொன்னுள். எனக்கு நம்பிக்கை இருக்கு. சில சமயம் பின்னலே நடக்கிறதை முன்னடியே நான் சொப்பனமாக கண்டிருக்கேன். சில சமயம் புரியாத கனவுன்னு நான் நினைச்சதெல்லாம், போகப்