பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் இவை ஒன்றை விட்டொன்று என்றும் இணை பிரியாத் துணைப் பொருள்கள். அவள் இன்று வரவேண்டிய காரணம் என்ன? எனக்கு இது மிகவும் சந்தேகத்தைத் தருகிறது. கபடமே அறி யாத மாதவராயரை அவள் ஒருவேளை தன் வலையில் விழச் செய்வாளோ ஏழையாய் வருந்தித் தவிக்கும் இவர் இன்னம் அதிகமாகத் துன்புற்றுத் துயரக் கடலில் மூழ்க நேரிடுமோ! இருக்கட்டும்; நான் உடனே போய் இவர் அவள் பேரில் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்தை மாற்ற முயலுகிறேன். மாத ஸோமேசா இன்னம் வஸந்தசேனையின் வண்டி வரவில்லையா? ஸோமே இல்லை. (ஒருவித வெறுப்போடு/உம் என்னமோ எனக்கொன்றும் பிடிக்கவில்லை. - மாத உனக்கு என்ன பிடிக்கவில்லை. ஸோமே ; அபாத்திரமான மனிதரிடத்தில் நீங்கள் இவ்வளவு அபிமானம் வைப்பது? கேவலம் அற்ப குணத்தைக் கொண்ட தாஸியிடத்தில் உங்களுக்கு இவ்வளவு சபலம் உண்டானது மிகவும் தவறு. தவிர நான் போயிருந்த போது அவளும் அவ ளுடைய பணிப் பெண்களும் என்னை எவ்வளவு ஏளனம் செய்தார்கள் தெரியுமா? தாஸியின் உறவானது காலில் தைத்த முள்ளைப் போன்றது. முதலில் நுழைவதே தெரியாது. அதைப் பிறகு நாம் எவ்வளவு வருந்திப் பிடிங்கி எடுத்தல் வேண்டும் என்பதை நான் தெரிவிக்க வேண்டியதில்லை. தாஸி நுழைந்த வீடும், சனியன் நுழைந்த வீடும் ஒழியா விஸ்னத்தை அடை யும். ஆகையால், அவளை நீங்கள் பார்ப்பதும் அவளுடன் சம் பாஷிப்பதும் பிறகு துயரைத் தரும். ஆகையால் அவளைப் பார்க்க இப்பொழுது சந்தர்ப்பமில்லையென்று சொல்லியனுப்பி விடுங் கள். விருத்தம்: பைரவி மாத நண்பனே ஏனோ வந்த நங்கையை நினைத்த வாறு புண்படு மொழியாலேசிப் புகன்றனை நவைகள் சால?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/104&oldid=887314" இலிருந்து மீள்விக்கப்பட்டது