பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 107 மாத தனபாலா வஸந்தஸேனை வந்திருப்பது நிஜந்தானா? தன ஆம், ஸ்வாமி! மாத ஆகா! சந்தோஷ சங்கதி கொண்டு வந்தவர் வெறுங் கையோடு போகக் கூடாது. இதோ எனது அங்க வஸ்திரத்தை உன் சிரமத்திற்காக எடுத்துக் கொள். (கொடுக்கிறார்) போ! சீக்கிரம் உள்ளே அழைத்து வா. தன . உத்தரவு! (போகிறான்/ ஸோமே : நான் சொன்னது உண்மை என்று இப்பொழு தாவது மனதில் பட்டதா? அவள் எதற்காக வருகிறாள் என்பது தெரிகிறதா? மாத எதற்காக வருகிறாள்? ஸோமே ; அவளுடைய ஆபரணங்களின் கிரயம் நம்முடைய வைர ஸ்ரத்தைக் காட்டிலும் அதிகமானது. அந்த அதிகத்தைப் பெறும் பொருட்டு வந்திருக்கிறாள். மாத அப்படியானால் அவள் வந்தது நியாயந்தானே! அதைக் கொடுப்பது நம்முடைய கடமை அல்லவோ வரட்டும்; அவள் இச்சையைப் பூர்த்தி செய்து அனுப்புகிறேன். (வளிவந்தளேயனை ஒரு தோழியுடன் வருகிறாள்) வஸ ஸோமேசரே! எங்கே நம்முடைய ஜூதர்? ஸோமே ; (தனக்குள்) ஆம் ஜூதர்தான்! நல்ல கெளரதை யான பட்டப் பெயர் பெற்றார் /உரக்க அம்மா! அவர் அதோ சோலைக்குள்ளிருக்கிறார். வஸ அடி ஸ்கி! நான் அவரிடத்தில் எப்படிப் பேசுகிறது? எனக்கு மிகவும் வெட்கமாய் இருக்கிறதே! தோழி : வெட்கமென்ன! ஜூதரே! நமஸ்காரம் என்று சொல்லுங்களேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/109&oldid=887324" இலிருந்து மீள்விக்கப்பட்டது