பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 1 13 யும் என்னுடைய பூரீதனமாக ஏற்றுக் கொண்டு இனித் தாங்கள் துன்பத்தையும், மனக் கவலையும் நீக்கி இன்புற்று வாழலாம். மாத என்ன ஆச்சரியம்! இது எங்கும் நடக்காத விந்தை யாய் இருக்கிறதே! பரம தரித்திரனாகிய என்னைக் குல ஸ்திரீ யும் மணக்க இச்சைப்பட மாட்டாளே. அப்படி இருக்கப் பணத் திலேயே கண்ணுங் கருத்துமாய் உள்ள தாஸி குலத்தில் உதித்த நீ விரும்புவது நம்பத் தகுந்ததாய் இல்லையே! உன்னுடைய பேரழகைக் கண்டு மயங்கி உன்மீது ஆசை கொண்டு எத்தனையோ தனவந்தர்கள் உன் மாளிகையின் வாசலில் உனது தயவிற்காகக் காத்திருப்பார்களே! அரசன் மைத்துனன் என்றால் நகரமே நடுங் கும். அவனையும் அவமதிக்கிறாய்! இதென்ன வினோதம்! இவ் வளவு மேன்மைகளை அலட்சியம் செய்து விட்டு என்னை நாடுவதின் காரணமென்ன? இது கனவோ? அல்லது நினைவு தானோ? இப்படியும் நடக்குமோ? இதுவரையில் நீ என்னிடத் தில் உண்மையாய்ப் பேசியதாக நினைத்தேன். இப்பொழுதே அதை உள்ளபடி அறிந்தேன். நான் தரித்திரன் என்று நீயும் என்னை ஹேளனம் செய்கிறாய் போல் இருக்கிறது. வஸ் : /காதைப் பொத்திக் கொண்டு) அடாடா எவ்வளவு கடுரமான வார்த்தைகள் ஸ்வாமி! நான் சொன்னது எல்லாம் உண்மையே அன்றி அணு அளவும் பொய்யல்ல. முற்றிலும் சத்யம். தங்கள் விரோதியும் தங்களுக்கு மனக் கவலை உண்டாக்க அஞ்சிப் பின்வாங்குவானே. அப்படி இருக்க, நான் அதைச் செய்வேனா? தங்களுடைய பாத சாrயாகச் சொல்கிறேன். நான் தங்கள் பேரிலேயே காதல் கொண்டு நெடு நாளாய் இதே ந்ோயால் வாடி வதங்கிக் கிடக்கிறேன். தாங்கள் என்னை உல்லங்கனம் செய்து விட்டால் எனக்கு வேறு புகலில்லை. நான் மற்றவர்களைப் போலப் பணத்திற்காக விரும்புபவள் அல்ல குணத்திற்காக விரும்புகிறேன் என்னை எப்படியாயி னும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் இனிமேல் திரும்பி என் மாளிகைக்குப் போக மாட்டேன். மாத மாதரசி எத்தனையோ கோடி தவம் செய்து அதன் பயனாய்க் கிடைக்கத் தகுந்த உன்னையும் உன் ஐசுவரியத்தை வ.கோ.-8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/115&oldid=887336" இலிருந்து மீள்விக்கப்பட்டது