பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|38 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வீர. அதற்கு நான் இருக்கிறேன்; நீ ஒருவன் போனால் ஒன்பது மனிதரை நான் உன் மனைவிக்குச் சம்பாதித்துத் தருகிறேன். பயப்படாதே; அதெல்லாம் உனக்கென்ன கவலை? ஒட்டு. பத்ம சரி? அப்படியானால் ஒட்டுகிறேன்! இதோ வந்து விட்டேன். நல்ல வேளை ஒரு கெடுதலும் உண்டாகவில்லை. வீர போக்கிரிப் பயலே முதலில் பொய் சொன்னாய் அல்லவா? பத்ம : நிஜன்தான் மகாப் பிரபு வீர (தேமுனைப் பார்த்து/அடே! நீ முன்னால் ஏறிக் கொள். தோழ சரி! அப்படியே ஏறுகிறேன். வீர நில்! நில்! நானல்லவோ வண்டியின் சொந்தக்காரன். உனக்கா முதல் மரியாதை? நான் முதலில் ஏறுகிறேன். நீ முதலில் ஏறக் கூடாது. தோழ நீங்கள் கட்டளை இட்டபடியால் நான் ஏறப் போனேன். மன்னிக்க வேண்டும். வீர இருக்கலாம். ஆனால் முதலில் நான் ஏறும்படி நீ என்னின வேண்டிக் கொண்டிருக்க வேண்டும். தோழ : மகாப் பிரபு நீங்கள் தயவு செய்து முதலில் ஏறிக் கொள்ளுங்கள். வீர. அதுதான் சரி ஏறுகிறேன். (வண்டிக் கதவைத் திறந்து ஏறி, உடனே வேகமாய்க் கீழே இறங்கித் தோமுன் கையைப் பிடித்துக் கொண்டு) ஐயையோ மோசம் வந்தது. பேயோ! பிசாசோ திருடனோ எதுவோ வண்டியில் இருக்கிறது! திருட னாக இருந்தால் நம்முடைய சொத்தைக் கொள்ளையடித்து விடு வான். பேயாயிருந்தால் நம்மை இப்படியே விழுங்கி விடும். தோழ என்ன ஆச்சரியம்! திருடனாவது பேயாவது வண் டிக்குள் வரவாவது! வீர நீயே போய்ப் பார். அது ஒரு பெண்ணைப் போல் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/140&oldid=887392" இலிருந்து மீள்விக்கப்பட்டது