பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#42 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வஸ் ஐயா! மன்னிக்க வேண்டும். நான் மாதவராய ருடைய சோலைக்குப் போகிறேன். இது அவருடைய வண்டி என்று ஏறி விட்டேன். வீர : அந்த நித்திய தரித்திரனிடம் போக என் வண்டியை உபயோகித்துக் கொண்டாயோ நாயே? இறங்கு கீழே! வஸ எது உமக்கு இகழ்வாகத் தோன்றுகிறதோ அது எனக்கு மிகவும் மேன்மையாகத் தோன்றுகிறது. அவரவர்களின் விருப்பம்! எல்லாம் தலை விதியின்படி நடக்கிறது. விருத்தம் - மோகனம் வீர வேசையே வஸந்தசேனை! பிடிவாதம்விடுத்தா யில்லை, காசையே மதிக்குந் தாஸி யகத்தினிலுதித்துங் கற்பி லாசையே வைத்தாயென்று மன்னியர் வதனங் காணக் கூசுமோர் நீர்மை பெற்ற குலமக ளெனவே சொற்றாய்! ஜெடாயு பலியின் மனைவியினுடைய தலை மயிரைப் பிடித்திழுத்ததைப் போல இதோ உன்னை வெளியில் இழுத்து விடுகிறேன் பார்! தோழ பிரபு பொறுத்துக் கொள்ள வேண்டும். கூந்தலில் கையை வைக்க வேண்டாம். மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் புஷ்பக் கொடியை யாராவது பிடித்திழுத்து அறுப்பார்களா? இவளை விட்டு விடுங்கள்; நான் கீழே இறக்கி விடுகிறேன். இவள் தேவையான இடத்திற்குப் போகட்டும். நாம் வண்டி யில் ஏறிக் கொண்டு அரண்மனைக்குப் போவோம். /அவளைக் கீழே இறக்கி விடுகிறான்) வீர (தனக்குள் ஆகா! இவள் என்னிடம் எவ்வளவு அவ மதிப்பாய்ப் பேசுகிறாள். இவள் பேரில் என் மனதில் எழுந்து பொங்கும் கோபத்தை எப்படி அடக்குவேன்? அவளுக்கு ஒரு அடியாவது, குத்தாவது, உதையாவது கொடுக்காவிட்டால் என் கோபம் கொஞ்சமும் தணியாது. இவள் உயிரை வாங்க வேண் டும். அடே நண்பா இவளை உடனே கொன்று விட்டு மறு வேலை பார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/144&oldid=887400" இலிருந்து மீள்விக்கப்பட்டது