பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் பத்ம வஞ்சனை இல்லாமல் வயிறு நிறைய போஜனம் செய்கிறேன். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வீர உன்னை வேலைக்காரர்களுக்கு எல்லாம் எஜமானன் ஆக்குவேன். பத்ம : அப்படியானால் தங்கள் தயவினால் நான் பெரிய மனிஷ்யனாகிறேன். வீர நான் சொல்வதைச் செய்ய வேண்டும். பத்ம தடை என்ன சொல்லுங்கள் அவசியம் செய்கிறேன். வீர இந்த வஸந்தஸேனையை உடனே கொன்று விடு. பத்ம மகாப் பிரபு இதுதானா ஒரு பிரமாதம். இதைத் தவிர நீங்கள் எந்தக் காரியம் செய்யச் சொன்ன போதிலும் நான் செய்யாமல் இருப்பேனோ? அப்படி இருந்தால் என்னைக் காட்டிலும் நன்றி கெட்டவன் யார்? வீர அடே போக்கிரிப் பயலே! நான் உன்னுடைய எஜமா ଟ୪Tଈ୪Tର)ର୬ରuit? பத்ம ஸ்வாமி உண்மைதான். தாங்கள் என் சரீரத்திற்கு எஜமானே. ஆனால் என்னுடைய பாவ புண்ணியத்திற்கு நான் தானே எஜமான். இதைச் செய்ய என் மனமும் கையும் துணிய வில்லை. மன்னிக்க வேண்டும். வீர என்னுடைய வேலைக்காரனாகிய நீ வேறு எவனுக்கு இப்படிப் பயப்படுகிறாய்? பத்ம வருங்காலத்திற்கு. வீர வருங்காலமென்பவன் யாரடா அவன்? பத்ம அவன் நம்முடைய நன்மை தீமைகளுக்குத் தகுந்த விதம் நமக்குப் பதில் செய்பவன். விர நன்மை செய்தால் என்ன பதில் கிடைக்கும்? பத்ம : தங்களுடையதைப் போன்ற செல்வமும் சிறப்பும் கிடைக்கும். வீர தீமைக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/146&oldid=887404" இலிருந்து மீள்விக்கப்பட்டது