பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் (தனக்குள் இவன் இருந்தால் காரியம் முடியாது. இவனையும் அனுப்பி விடுகிறேன். - அடே பைத்தியக்காரா நான் சொன்னது இன்னதென்பதை நீ சரியாக உணரவில்லையே! இதுதானா உன்னுடைய புத்திசாலித்தனம் இவ்வளவு உயர்ந்த குலத்தில் பிறந்த நான் கேவலம் இந்த இழிவான காரியத்தைச் செய்ய உண்மையில் விரும்புவேனோ என்பதை அறிந்து கொள்ளக் கூடவில்லையே! இவள் பயந்து கொண்டு என் இச்சைக்கு இணங்கட்டும் என்று இப்படிச் சொன்னேன். இவ்வளவுதானா உன் புத்தி கூர்மை? தோழ உயர் குலத்திற்குத் தகுந்த குணவொழுக்கம் இல்லா விட்டால், மேலான பிறப்பைப் பற்றி புகழ்ந்து ஆத்ம ஸ்துதி செய்து கொள்வதில் பயனென்ன? வீர உண்மை என்னவென்றால் நீ இங்கிருப்பதனால் இவள் வெட்கப்படுகிறாள். கொஞ்ச நேரத்திற்கு எங்கள் இருவரையும் தனியாக விட்டுப் போ. அந்த முட்டாளும் எங்கேயோ ஒடிப் போய் விட்டான். நீ போய் அவனையும் தேடி அழைத்து வா. அதற்குள் இவள் இணங்கி விடுவாள். தோழ (தனக்குள்) அப்படியும் இருக்கலாம். நான் சற்று நேரம் அப்பால் போகிறேன். ஐயா உத்தரவுபடி நான் போகிறேன். வஸ் : (அவன் வழியை மறைத்து ஐயா என்னை இங்கு தனியாக விட்டுப் போக வேண்டாம். உம்மைத் தவிர இங்கு எனக்கு வேறொரு துணையுமில்லை. காப்பாற்ற வேண்டும். தோழ நீ எதற்கும் பயப்பட வேண்டாம். நான் இருக்கி றேன். (வீரசேனனைப் பார்த்து, ஐயா வளபந்தளேயனையை உம் மிடம் ஒப்புவித்துப் போகிறேன். நான் திரும்பி வரும் போது ஜாக்கிரதையாக இவளை என்னிடம் ஒப்புவிக்க வேண்டும்.) வீர சரி. அப்படியே ஆகட்டும். தோழ உண்மைதானா? வீர சத்தியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/148&oldid=887408" இலிருந்து மீள்விக்கப்பட்டது