பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ஸோ (தனக்குள்) வஸந்தஸேனை அவள் மாளிகையில் காணப்படவில்லையே? வேறு எங்கு போய்த் தேடுகிறது. என் மித்திரரை நியாய ஸ்தலத்திற்கு அழைத்துப் போயிருப்பதாய்க் கேள்விப்பட்டேன். நியாய ஸ்தலம் இதோ இருக்கிறது. உள்ளே போய் விசேஷம் என்ன என்பதை அறிந்து கொண்டு பிறகு வஸந்தஸேனையைத் தேடுகிறேன். (உள்ளே போப்/ ஆ. மித்திர ரத்னமே! என்ன விசேஷம்? இங்கு வந்த காரண மென்ன? மாத ஸோமேசா! நான் கொலை பாதகன்; என்னைக் காதலித்த மங்கையைக் கொன்ற படுபாவி நான். ஸோ ஆகா! என்ன சொன்னீர்கள் உங்களை இப்படிச் சொல்லத் துணிந்தவன் யார்? மங்கையையாவது கொலை செய்ய வாவது? மாத அதோ நிற்கும் கொடியவனே என் விதியை நிறை வேற்றும் கருவியாக வந்திருக்கிறான். ((βου/7(βιοσσών காதில் விவரத்தைச் சொல்லுகிறார்) ஸோ அவள் தன் மாளிகைக்குப் போய் விட்டதாகச் சொல்லி விடுகிறதுதானே. மாத நான் என்ன சொன்ன போதிலும் பயனில்லை; ஏழையின் சொல்லை யார் நம்புவார்கள்? ஸோ: நியாயாதிபதிகளே இதென்னஅநியாயம்? நம்முடைய நகரத்தைக் கோவில்களாலும், தடாகங்களாலும், சாலைகளா லும், மண்டபங்களாலும், ஊற்றுக்களாலும், வாவிகளாலும் அலங்கரித்த இந்த மகானுபாவரா கேவலம் அற்பமான கொலை பாதகம் செய்பவர்? நன்றாய்த் தீர்க்காலோசனை செய்து பாருங் கள். அடே வீரசேனப் பதரே மனிதரை வருத்தி வயிறெரியச் செய்யும் பரம பாதகா ஒரு கொடியிலுள்ள புஷ்பத்தைப் பறிப் பதைக் கூட பாவமென்று மதிக்கும் இந்தப் புருஷோத்தமர், இகத் திற்கும் பரத்திற்கும் இகழையும் துன்பத்தையும் தரும் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/170&oldid=887455" இலிருந்து மீள்விக்கப்பட்டது