பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 179 (தன் பூணுரலை எடுத்து அவன் கழுத்தில் போடுகிறார்) 1 சண் சாமி நேரமாவுது; ராசா கோவிச்சுக்குவாரு போதும், போவலாம். சிசு அடே சண்டாளப் பயலே என் அப்பாவை எங்கே கூப்பிடுகிறாய்? மாத அப்பா கண்மணி! நான் உயிரை விடப் போகிறேன். இமயன் வந்து காத்துக் கொண்டிருக்கிறான். என் காலம் முடிந்து விட்டது. என்னை இனி பார்க்க மாட்டாய். எங்கே என்னைக் கட்டிக் கொண்டு ஒரு முத்தங் கொடு. 2 சண் அடே கொளந்தே சின்ன சாதிலே பொறந்தவங் கள்ளாம் சண்டாளர் ஆவமாட்டாங்க; நல்ல புண்ணியவாங் களை வதைக்கறாங்க பாரு அவங்கதான் சண்டாளரு. - சிசு : அப்படியானால் என்னுடைய அப்பாவை ஏனடா கொல்ல நினைக்கிறாய்? 1 சண் அது ராசா உத்தரவு! நாங்க என்ன பண்ணுவம்? பாவ புண்ணியம் அவுருது. சிசு : அப்படியானால் நான் வருகிறேன்; என்னைக் கொன்று விடு. அப்பாவை விட்டு விடு. அப்பாவைப் பார்க்காமல் போனால் அம்மா சாப்பிடாமல், அழுது உயிரை விட்டு விடுவாள். அப்பாவைக் கொல்லக் கூடாது. என்னை அழைத்துக் கொண்டு போங்கள். 2 சண் ஆகா! புலி வவுத்துலே பூனை பொறக்குமா? கொளந்த என்ன தகிரியசாலி! நீ சேனா நாளைக்கு சொகமாய் இருக்க அந்த சாச்சாத்துக் கடவுளு செய்வாரப்பா! மாத (குழந்தையை அணைத்து/ ஆகா தன்யனானேன்! இதுவல்லவோ உண்மைச் செல்வம் உற்றார் உறவினர் நம் மிடத்தில் காட்டும் ஆசாபாசத்தைக் காட்டிலும் இன்பம் தரக் கூடிய பொருள் வேறு என்ன இருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/181&oldid=887481" இலிருந்து மீள்விக்கப்பட்டது