பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் பத்ம இதோ வந்தார் என் எஜமானர்: 1-2 சண் : சாமி தெண்டம்! வீர: அடே பத்மநாபா நீ எங்கே போகிறாய்? வா என்கூட. பத்ம நல்ல யோக்கியர் வஸந்தஸேனையை கொன்றதும் அன்றி, மகா உத்தமரான மாதவராயரையும் கொல்ல வழி தேடி ரீைரோ) வீர அடே எவ்வளவோ யோக்கியனான நானா ஒரு ஸ்திரீயைக் கொல்வேன்? . ஜனங்கள் ஆம் நீதான் அவளைக் கொன்றவன்; மாதவ ராயர் அல்ல. வீர அப்படி எவன் சொன்னவன்? ஜனங்கள் : இந்த நற்குணமுள்ள மனிதனே சொல்லு கிறான். நீதான் கொன்றிருப்பாய். வீர ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். இவன் என்னுடைய அடிமை! இவனுக்குத் திருட்டுக்கை அதிகம்! அதற்காக இவனைத் தண்டித்து ஒரு இடத்தில் தனியாக பூட்டி வைத்திருந்தேன். இந்த குரோதத்தை வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லுகிறான். அடே பத்மநாபா உண்மையைச் சொல்; நான் சொல்வது சரிதானே (தன் விரலிலிருந்த ஒரு மோதிரத்தை அவருக்குத் தெரியாமல் கழற்றிக் கொண்டு அவனுக்கு அருகில் போய் அதை அவன் கையில் இரகசியமாகக் கொடுத்து) இதை நீ எடுத்துக் கொள். முன் சொன்னதை மாற்றிச் சொல்லி விடு. பத்ம : (மோதிரத்தை ஜனங்களுக்குக் காட்டி) இதோ பாருங்கள். இந்த மோதிரத்தை இலஞ்சம் கொடுத்துப் பேசாமல் இருக்கச் சொல்லுகிறார். வீர : (மோதிரத்தை பிடுங்கி) பார்த்தீர்களா பார்த்தீர்களா! இதுதான் திருட்டுப் போன மோதிரம் இதற்காகத்தான் இவனைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/184&oldid=887486" இலிருந்து மீள்விக்கப்பட்டது