பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - வஸ ஆகா ஸ்வாமி பாவியாகிய என்னால் உங்களுக்கு ந்தக் காலகதி வந்ததோ (வந்து அவர் மார்பில் விழுந்து நத து (42 ஆலிங்கனம் செய்ய, அவர் சற்று அப்படியே இருந்து விலகு கிறார்) ஜன வஸந்தஸேனை வஸந்தஸேனை!! 2 சண் வஸந்தஸேனையா? என்ன ஆச்சரியம்! சந் நல்ல காலந்தான் இவர் இதுவரையில் உயிரோடு இருந்தது! 1 சண் ஐயா இன்னும் நூறு வருசம் உயிரோடெ இருக் கட்டும். - வீர : இதென்ன அதிசயம்; வஸந்தஸேனை எப்படியோ உயிருடன் வந்து விட்டாளே! நான் இனிமேல் இங்கிருப்பது பிசகு, ஒடிப் போக வேண்டும். (ஒடுகிறான்) 1 சண் அண்ணே அவனெ உடாதே ஒடறான்! (இருவரும் ஜனங்களும் அவனைத் தொடர்ந்து ஒடுகிறார்கள்/ மாத காயும் பயிரில் மழை பெய்ததைப் போல் கழுவிற்கு மேல் உயர்த்தப்பட்ட என்னைக் காப்பாற்றியது யார்? இவள் வஸந்தஸேனை தானோ? அல்லது அவளைப் போல ஒரு உருவம் என்னைக் காக்கும் பொருட்டே ஆகாயத்தில் இருந்து குதித்ததோ! நான் விழித்துக் கொண்டு இருக்கிறேனோ? அல்லது கனவு காண்கின்றேனோ என் புத்தி மாறாட்டம் அடைந் ததோ! என்னை இந்த விபத்தில் இருந்து விலக்கும் பொருட்டு அவளே தெய்வ லோகத்தில் இருந்து மனித சுவரூபத்துடன் தோன்றினாளோ? வஸ : (அவர் பாதத்தில் விழுந்து) எவ்வளவோ மேன் மையைப் பெற்ற தங்களுக்கு, இந்தத் தீங்கு சம்பவிக்கக் காரண மாய் இருந்தவள் எவளோ அவளே வந்தனள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/190&oldid=887500" இலிருந்து மீள்விக்கப்பட்டது