பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஸந்த கோகிலம் 189 மாத ஆகா கடைசியில் தருமமே ஜெயமடைந்ததோ! ஈசுவரனுடைய மகிமையே மகிமை இந்தச் சந்நியாசி யார்? வஸ் இவரே என் உயிரைக் காப்பாற்றியவர். மாத அப்படியா ஸ்வாமீ. நமஸ்காரம் தங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். (அருகில் பெருத்த சத்தம் உண்டாகிறது 'பிரதாப ராஜனுக்கு ஜெயம் உண்டாகட்டும். புதிய அரசன் நீடுழி வாழ்வாராக. (சசிமுகன் வருகிறான்) (தனக்குள்) இந்த தேசத்து அரசன் செய்த அக்கிரமச் செயல் களுக்கெல்லாம் பிராயச்சித்தமாக அவனை இந்தக் கைகளே கொன்றன. மூவுலகத்தையும் கவரக்கூடிய வல்லமை பெற்ற பிரதாபனுடைய குணமே குணம் அவன் சிம்மாசனம் ஏறிய வுடன் செய்த முதல் காரியத்தில் இருந்தே அவனுடைய மனதின் மேன்மை நன்றாகத் தெரிகிறது. இதுதான் இடம். மாதவராயர் இங்குதான் இருப்பார் ஆகா! அதோ வஸந்தஸேனையும் நிற் கிறாளே! (மாதவராயரை வணங்கி) ஸ்வாமி நமஸ்காரம். மாத ஐயா! தாங்கள் யார்? சசி உங்கள் மாளிகையில் கன்னம் வைத்து, உங்களிடம் வஸந்தஸேனையால் ஒப்புவிக்கப்பட்டிருந்த நகைகளைத் திருடி யவன் நான்தான். என்னுடைய குற்றத்தைத் தங்களிடத்தில் ஒப்புக் கொண்டு, தங்களுடைய மன்னிப்பைப் பெற வந்தேன். மாத அப்படியா சந்தோஷம் நீர் செய்தது குற்றமல்ல! நல்ல காரியமே செய்தீர். வேறு ஏழையின் வீட்டில் திருடி அவனை வருத்துவது இதனால் இல்லாமல் போயிற்றல்லவோ. சசி ஆகா எப்பொழுதும் மேன்மைக் குணமே ஸ்வாமி! தங்களுக்கு ஒரு சந்தோஷ சமாசாரம் கொண்டு வந்திருக்கிறேன். யாவருக்கும் தீமை செய்து வந்த நமது கொடுங்கோல் அரசனைக் கொன்று விட்டோம். அவனுக்குப் பதிலாகப் பிரதாபன் சிம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/191&oldid=887502" இலிருந்து மீள்விக்கப்பட்டது