பக்கம்:வசந்த கோகிலம்-1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் வீர : அப்படியானால் சிரி முட்டாள். ஸோமே ; அப்படியே ஆகட்டும். வீர எப்பொழுது? லோமே மாதவராயர் திரும்பவும் தனவந்தராகும் பொழுது ஆகட்டும். வீர : அடே ஸ்பிண்டி போதும் வாயை மூடு எனக்கு கோபம் வரும் போல் இருக்கிறது. கடைசி முடிவாக நான் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். நீ போய் அதை மாதவராயனிடம் தெரிவி கேவலம் விலைமகளாகிய வஸந்தஸேனையை நாங்கள் எவ்வளவு பலவந்தப்படுத்தியும் அவள் எங்களுக்கு இணங்க வில்லை. இவ்வளவு தூரம் துரத்திக் கொண்டு ஓடிவரும் சிரமத்தை அவள் எங்களுக்குக் கொடுத்து, நித்திய தரித்திரனாகிய மாதவ ராயன் வீட்டிற்குள் போய் நுழைந்து கொண்டிருக்கிறாள். அவன் மீதே அவள் காதல் கொண்டிருக்கிறாளாம். நாங்கள் அவள் மன திற்குப் பிடிக்கவில்லையாம். யாதொரு ஆக்ஷேபனையும் இல்லா மல் உடனே அவளை அவனே நேரில் என்னிடத்தில் கொண்டு வந்து ஒப்புவித்தால் தப்பினான். இல்லாவிட்டால், எப்பொழு தும் தீராத என்னுடைய பகைக்கு அவன் அருகனாக வேண்டும். அவனிடம் போய் இதைத் தெரிவி. நான் அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். நீ என்னை ஏமாற்றப் பார்த்தால் பாக்கைக் கதவின் மூலையில் வைத்து நெரிப்பதைப் போல உன் தலையை என் பல்லால் நெரித்து விடுவேன். தெரியுமா? லோமே ; தெரியும். அப்படியே ஆகட்டும். வீர சரி போ; நான் இந்த மூலையில் இருக்கிறேன். (அவனும் சேவகனும் ஒரு மூலையில் மறைகிறார்கள்) ஸோமே : கோமளா இராஜாவின் மைத்துனன் உன்னை இங்கு அவமானப்படுத்தியதை மாதவராயரிடம் சொல்ல வேண் டாம். அவர் ஏற்கெனவே தன் சொந்த விஷயங்களைப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_கோகிலம்-1.pdf/38&oldid=887555" இலிருந்து மீள்விக்கப்பட்டது